Thursday, 19 June 2014

தவிர்த்தலின் வலி



தவிர்த்தலின் வலிகளை
புன்னகை திரையிட்டு மறைகின்றேன்
இமை தட்டி நிற்கும் நீர்த்துளிகளை
தொலைக்க இடம் தெரியாமல்

எதிர்வரும் ஒரு அடைமழை நாளில்
தடயங்கள் இன்றி தொலைக்க தீர்மானித்தேன்

ஒரு மழை நாளும் வந்தது
உன்னுடன் களித்திட காத்திருந்த
மழைநாட்கள் இத்தனை ஆக்ரோஷமாய் இல்லை

அணையுடைந்த வெள்ளமாய்
வழிந்த கண்ணீரைக்
கரைத்த மழையில்
நனைந்து திரும்பினேன்.

அழுதலின் பொருட்டோ
நனைதலின் பொருட்டோ
தும்மல் எழுந்தது
என் நினைவே சிறுதும் இல்லா
உன்னை நினைவுருத்தியவாறு ...


2 comments:

  1. தவிர்க்க முடியாத நினைவுகளின் வலியை ரசித்தேன்..

    ReplyDelete