தன்னிருப்பை நினைவூட்டி
காலப் பெருவெளியில் கரைந்தபடி
நிழலாடிக் கொண்டிருக்கிறது
நேற்றின் நினைவுகள்
எதுவென்றறியாத நாளைய பயங்களும்
மனதின் நம்பிக்கைகளும்
ஒன்றாய் பிணைத்து உயிரிழையில் ஊசலாட
இன்றைய நாளோ
அவை துயிலுறங்கி
நேற்றையும் நாளையையும்
சூன்யமாக்கி கல்லெறிய
மனக் குளத்தின் நீர்த்திவலைகளாய்
நினைவுக் கரையான்கள்
மெல்ல முன்னேறி மென்றுக்கொண்டிருக்கிறது
தன்னிருப்பை நினைவூட்டும் !!
ReplyDeleteமெலிதாக சப்தம் எழுப்பும் -வளர்ப்பு
பிராணி போல அருமையான வார்த்தை
நேற்றின் நினைவுகள் ....
நாளைய பயங்கள் ....
இன்றைய நாள் ...!
நினைவுக் கரையான்கள் - மனக் குளத்தில் -
மெல்ல முன்னேறி மென்றுக்கொண்டிருக்கிறது ..
இலக்கிய ( சு ) வாசமுள்ள வரிகள் ! அருமை
மீரா மேம் !
நன்றி பதி சார்
ReplyDelete