நானென்பது யாரென
புரியாத புதிராய்
முன்னின்றது
கேள்வியொன்று !!!
விடை தேடி களைத்த வேளையில்
பெரும் கேள்விக்கனைகளோடு
முன் வந்து நின்றது அறிவு
நானென்பது யார்?
என்னில் உணர்ந்த அனுபவங்களா?
ஆழ்மனக் கடலில் புதைந்திருக்கும்
நினைவுகளின் பொக்கிஷங்களா?
நம்பிக்கையின் ரேகைகளா?
மரபு வழி புகுந்த
முன்னோர்களின் கனவுக்கோளங்களா ?
சொல்லற்று நிற்கையில்
வியப்பாய் விரிகிறது "நான்"!!!
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளமாய்
விலகவும், விலக்கவும் இயலா
மனதை நிரப்பும் கேள்விகளோடு
மற்றொரு நாளும் தொடங்குகிறது...
தேடல் முடியவில்லை ....
பெருவெளியில் படர்ந்திருக்கும்
காலத்தை போலவே
புரிவதாய் இல்லை
நள்ளிரவில் எனை எழுப்பும் கேள்விகள்
அதிகாலை உதிக்கும் இளங்கதிரே
நீயாவது சொல்
நானென்பது யாரென்று ??
நல்லதொரு கேள்வி...
ReplyDeleteஉணர வேண்டிய...
பதில் உள்ள கேள்வி...
வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன் சார்.. தொடர்ந்து வாசித்து விமர்சியுங்கள்...:)
Deleteஅனைவரும் தன்னை கேட்டு உணரவேண்டிய ஒன்று! சிறப்பாக கவிதை வடித்தமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி... என்னை நானே பலமுறை கேட்டு விடை தெரியாமல் தவிக்கும் கேள்விகளுள் முதலாம் கேள்வி இது.... நன்றி கருத்திட்டமைக்கு...:)
Delete