நெடுந்தூர ஜன்னலோர பயணத்தில்
இப்போது ரசிப்பதற்கொன்றுமில்லை
ஊர் எல்லை தாண்டி வரும்
இருள் காடுகளைக் கடக்கும் போதெல்லாம்
மரங்களின் ஊடே ஊஞ்சல் கட்டி
ஆட தொடங்கிவிடுகிறது மனசு
ஆடும் போதே
கிளைகளுக்கிடையே
கீழிறங்கும்
நிலவொளியின் அழகில் மயங்குவதும்,
தவழும் பனிக் காற்றை
கை விரித்து தழுவிக் கொள்வதும்,
கூதலுக்கு இதமாய்
கைகள் தேய்த்து கன்னத்தில் ஒற்றிக் கொள்வதும்,
உவர்மண்ணின் மணத்தோடு
பசுமரத்தின் மணத்தை சுகமாய் சுவாசிப்பதும்
முன்னொரு காலாமாகிவிட்டது
மனிதம் தொலைத்த மனங்களைப் போலவே
பசுமையிழந்து மூச்சுத் திணறுகிறது
வனமெங்கும் விதைந்தெழுந்த
கான்கிரீட் காடுகளால்...
வருத்தப்பட வேண்டிய உண்மை...
ReplyDeleteகருத்திட்டமைக்கு நன்றி சார் ...
Deleteகான்கிரிட் காடுகளால் பசுமை மறைந்தது நெஞ்சை சுடும் விசயம்! அருமையான படைப்பு! நன்றி!
ReplyDeleteநன்றி ...
Delete