நினைவில் உணர்வெழுதி,
நீ எங்கோ நான் எங்கோவென
இருந்த போதும் ,
காற்றினிலே அன்பெழுதி
தூதாய் அனுப்புகிறேன்
அதைநீ முத்தமிட்டு நேசிக்கிறாய் !!
தோள் இல்லை - ஆனாலும் நான்
சாய்ந்துகொள்கிறேன் -உன்
மடியில்லை - இருந்தும் நான்
துயில் கொள்கிறேன்!!
விண்ணை எட்டிய
நம் நட்பின் உணர்வுகள் இன்று
நட்சத்திரங்களோடு நடுவினில்
உலவிக் கொண்டிருக்க
நானும் உன் நினைவுகளின் தனிமையில்
உலாவிக் கொண்டிருக்கிறேன்...
// காற்றினிலே அன்பெழுதி
ReplyDeleteதூதாய் அனுப்புகிறேன்
அதைநீ முத்தமிட்டு நேசிக்கிறாய் !! //
ஆகா...!
நன்றி தனபாலன் சார்...
Deleteசிறப்பான கற்பனை! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சார்..
Deleteகனவில் விதி எழுதி , நினைவில் உயிர் எழுதி
ReplyDeleteநீ எங்கோவென , நான் எங்கோவென இருந்த போதும்
நட்பின் நினைவுகள் ...இனிமையான ..!
தோள் இல்லை - ஆனாலும் நான் சாய்ந்துகொள்கிறேன் -உன்
மடியில்லை - இருந்தும் நான் துயில் கொள்கிறேன் !
நட்சத்திரங்களின் நடுவினில் -தனிமையில் உலாவும் !!
கவிதையும் , அதற்க்கான படமும் பொருத்தாமான அழகு !!
அருமை மேம் .............! பதி
நன்றி பதி சார்...
Delete