Sunday, 20 April 2014

காகிதத்தில் ஒரு காடு


தூரிகையால்
இலை ஒன்றைதீட்டினேன்
எங்கும் பசுமை நிறைந்திற்று

வியந்து பூவொன்று வரைந்தேன்
அதனின் வாசம் ஊரெங்கும் மணத்தது!!

காயொன்று எழுத
கனிந்து தித்தித்தது

வேர்களென்றும் விழுதுகளென்றும்
கிளைத்துத் தழைக்க
முழுமையாக்கினேன்

பறவைகள் குடிபெயர்ந்து
மகிழ்வாய் இசைத்திருந்தன

மரம் பெருகி வனமாகிற்று

மனிதம் தொலைந்த நகர் தொலைத்து
அவ்வனத்தின் அரசியானேன்.



8 comments:

  1. வனத்தின் அரசிக்கு வாழ்த்துகள்..

    வலைச்சர அறிமுகத்திற்கும் வாழ்த்துகள்..!

    ReplyDelete
  2. வணக்கம் !
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் தோழி !சிறப்பான கவிதை
    வரிகளைக் கண்டு மனம் மகிழ்ந்து பின்தொடர்கின்றேன்.வாழ்க தமிழ்
    என்றென்றும் தமிழோடு இணைந்திருப்போம் .மிக்க நன்றி தோழி
    பகிர்வுகளுக்கு .

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தொடர்ந்து வாசித்து கருத்து தெரிவிக்கவும் .. அன்பும் நன்றியும்!!!

      Delete
  3. அன்பின் மீரா - வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் - வனத்தின் அரசியானதற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. வனத்தின் அரசிக்கு வாழ்த்துக்கள்,,, சிறந்த கற்பனை..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete