சுமத்தப் பட்டோ
நத்தையின் ஓடு
தன்னுடன் பயணித்து வரும் போது
சுமையாகவும்
பலரை ஈர்க்கும் அழகானதொரு கூடாகவும்
ஓடில்லா நத்தை கற்பனைக்கு எட்டவில்லை
உடனிருக்கும் அதன் அடையாளமாய்
கூட்டிற்கான நகலாய்
பெண்களின் வரையறைகள்
சுமந்தோ- அல்லாமல்
சுமத்தப் பட்டோ
ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும்
சில நேரங்களில் சுமையாகவும்
அவளின் அடையாளங்களாகவும்
உண்மைகள்..
ReplyDeleteநன்றி
Deleteஅருமை தோழி
ReplyDeleteநன்றி....:)
Deleteசில நேரங்களில் சுமையாகவும் அவளின் அடையாளமாகவும்.... அருமை...
ReplyDeleteநன்றி...
Deleteநத்தைக் கூடு பெண் ஒப்பீடு சிறப்பு! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி...
Delete