Thursday, 3 April 2014

நீங்கா நினைவுகள்


கோடையின் விடுமுறைகளில்
கிராமத்து பாட்டி வீட்டிற்கு செல்லும் போது

மணல் வீடு கட்டி
மாமன் மகளோடு விளையாடியதும்

கூட்டாஞ்சோறு பொங்கி
விருந்து வச்சி மகிழ்ந்ததும்

கைகளில் சிக்காத
காற்றைப் பிடித்து
நாளை வேண்டுமென பத்திர படுத்தியதும்

தட்டானின் வாலில்
நூல் கட்டி பறக்க விட்டதும்

நுங்கு மட்டையில்
வண்டி ஓட்டியதும்

கருவேலங்காட்டுக்குள்
காத்தாடிக்கு முள் எடுக்க சென்றதும்

ஊரெல்லாம் சுத்திட்டு
புழுதியோடு வீட்டுக்கு வந்து
அம்மாவிடம் ஏச்சு வாங்கி

பாட்டி மடியில்
கவலைமறந்து உறங்கிய பொழுதுகளெல்லாம்

இன்றும் பசுமையாய்
நெஞ்சின் மூலையில்...

நம் பிள்ளைகள் விடுமுறைகென
பாட்டி வீடு செல்லும் வேளைகளில்....

4 comments:

  1. பதின்மத்தில் நிகழ்ந்த அழகு நினைவுகள்

    ReplyDelete
  2. இதெல்லாம் நானும் அனுபவிச்சிருக்கேன்... ஆனா இந்தக்காலக் குழந்தைகள் பாட்டி வீடு சென்றாலும் அங்கும் தொலைக்காட்சியும், இணைய விளையாட்டும் தானே..

    ReplyDelete
    Replies
    1. வருத்தமான உண்மை எழில் மேடம் .

      Delete