Wednesday, 2 July 2014

இயற்க்கை தந்த அற்புத பானம் .. இளநீர்



இளநீர் மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம். சுவையான பானம். சுத்தமானது கூட.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், என பல்வேறு வகைகள் உள்ளன.

இளநீரில் பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக இருக்கிற வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் நல்மருந்து இளநீர்.. உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். வெப்பத்தைத் தணிக்கும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும்.

ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. காலரா நோயாளிகளுக்கு இளநீர் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக நல்ல மருந்தாகிறது. சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. இளநீர் மிகவும் சுத்தமானது.

இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.


2 comments:

  1. Superb blog,, One thing "இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது" seems contradictory to siddha docs guidance. :-) (Sivakumar Arumugam Facebook follower)

    ReplyDelete
  2. நன்றி சிவகுமார்

    ReplyDelete