Friday, 12 September 2014

துளித்துளியாய் ஒரு கவிதை



துளித் துளியாய் சொட்டிக் கொண்டிருக்கிறது
முற்றத்தின் கீற்றுகளிலும்
மரங்களின் இலைகளிலும் மழை நீர்

பொழிந்ததின் அடையாளம் சற்று நேரத்தில் மறைந்திடலாம்
நீர் சூழ் மேகங்கள் காற்றின் திசைக்கேற்ப கலைந்து
கதிரவனின் ஒளியால் பெருவெளியெங்கும் தகிக்கலாம்

கூடடைந்த பறவைகளும் , மனிதர்களும்
தங்கள் இயல்புக்கு திரும்பலாம்

குட்டையென தேங்கிய கடைசித் துளியும்
நிலத்தின் உஷ்ணம் விழுங்கியதோடு
பெய்தலின் சுவடற்றுப் போகலாம்

ஆனால் சற்றுமுன் இங்கொரு பலத்த மழை பெய்தது
அதன் சாரல் தொட்டு என் உயிர் நனைத்து
உனக்காய் ஒரு கவிதை செய்துகொண்டிருக்கிறேன் !!

7 comments:

  1. ///ஆனால் சற்றுமுன் இங்கொரு பலத்த மழை பெய்தது
    அதன் சாரல் தொட்டு என் உயிர் நனைத்து
    உனக்காய் ஒரு கவிதை செய்துகொண்டிருக்கிறேன் !!
    ///

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அருமையான மழைக் கவிதை...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வணக்கம் சகோ உங்களின் வலைப்பூவால் இன்று வலைச்சரம் சிறக்கின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...நன்றி

    ReplyDelete