விடிந்தது ... காலையில் ஜேன் தன் கணவனிடம் விவாகரத்துக்கான நிபந்தனைகளை சமர்ப்பித்தாள். தனக்கு அவனிடம் இருந்து எதுவும் தேவையில்லை. ஆனால் விவாகரத்துக்கு ஒரு மாத கால அவகாசம் வேண்டும் எனவும் தங்களின் திருமணத்தின் போது அவன் அவளை கையில் தூக்கி கொண்டு மணவறையை விட்டு வெளியே வந்தது போல இனி வரும் ஒரு மாதகாலமும் தங்களின் தனியறையில் இருந்து வாசல் வரை தூக்கிக் கொண்டு வரவேண்டும் என்று கோரினாள். மிதமுள்ள அந்த ஒரு மாத காலத்தையும் அமைதியாக கழிக்கவேண்டும் என்பதால் அவனும் தன் மனைவின் அர்த்தமில்லா ( என்று தன் மனதில் நினைத்துக்கொண்டு ) கோரிக்கையை ஏற்றுக் கொண்டான் .
விவாகரத்து உறுதி செய்யப்பட்டதும் அடுத்த நாள் அவளை சுமந்தபடி வாசல் வரை வர இருவரும் தயக்கத்துடன் அசவுகரியமாக உணர்ந்தார்கள் . ஆனால் அவர்களை பின்தொடர்ந்த அவர்களின் மகனோ தன் அப்பா அம்மாவை கைகளில் ஏந்திய படி நடப்பதை பார்த்து மகிழ்ச்சியில் கைதட்டி சந்தோஷமடைந்தான் . அவனுக்கோ மனதில் லேசான உறுத்தல் ஏற்பட்டது.
அடுத்த நாள் இருவருக்கும் சற்று சவுகரியமாக இருந்தது. அவள் அவனின் மார்பில் சாய்ந்து கொண்டபோது அவளின் வாசம் அவனை தாக்கியது. பலநாள் தன் மனைவியை அலட்சியப்படுத்தியிருப்பதை எண்ணி வருத்தினான். அவள் தன் இளமையை தொலைத்து முதுமையில் அடியெடுத்து வைத்திருக்கிறாள். திருமணம் என்ற பெயரில் பெரும் சுமையொன்றை ஏற்றியது தவிர இவளுக்காக நான் என்ன செய்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்டான் .
ஐந்தாம் நாளில் தங்களுக்குள் நெருக்கம் மீண்டும் மலர்வதை அவன் உணர்ந்தான். இவள் தன் பத்து வருட வாழ்வை தனக்காக தியாகம் செய்திருக்கிறாள் என்பதை உணர்ந்தான். அடுத்து வந்த நாட்களில் நெருக்கம் இன்னும் அதிகமாவதை உணர்ந்தான் . அவளை சுமப்பது எளிதாக இருந்தது. ஒரு மாத காலம் சென்றதே தெரியவில்லை .
இறுதி நாளில் அவளை தூக்கிக்கொண்டு ஒரு அடி கூட அவனால் எடுத்து வைக்க முடியவில்லை. அதே நேரத்தில் வீட்டிற்க்குள் நுழைந்த மகன் , அப்பா நீங்கள் அம்மாவை தூக்கி சுமக்கும் நேரம் வந்துவிட்டது என்றான் . அவனை பொருத்தவரை தன் தந்தை , தாயை சுமப்பதை பார்ப்பது வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது . இதை சொல்லிவிட்டு மகன் வெளியில் சென்றுவிட , அவன் தன் மனைவியை இறுக்கமாக அணைத்தபடியே நம் வாழ்க்கை நெருக்கத்தை இழந்துவிட்டதை நான் கவனிக்க தவறிவிட்டேன் என்று அவளை இறக்கிவிட்டு அலுவலகம் விரைந்தான் .
தன் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் மீண்டும் வீடு விரைந்தான் . காரின் கதவை கூட பூட்டாமல் அவசரமாக மாடிப்படிகளில் ஏறி கதவை தட்டினான். கதவை திறந்த தன் மனைவியிடம் என்னை மன்னித்துவிடு ஜேன் ,எனக்கு விவாகரத்து தேவையில்லை என்றான். தங்களின் வாழ்வு கடினமாக மாறியதற்கு காரணம் தாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பவில்லை என்பதல்ல, தங்கள் வாழ்வின் பொன்னான தருணங்களை ஒருவருக்கொருவர் மதிக்கவில்லை என்பது தான் உண்மை என்றான். அவள் விழித்துக் கொண்டவளாய் அவனை ஏறெடுத்து பார்த்தாள். அவனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு விட்டு தனியறைக்குள் சென்று விம்மி வெடித்தாள். அவனோ படியிறங்கி மீண்டும் காரைஎடுத்தான்
தன்னை ஆசுவாசப்படுத்திகொண்டு மீண்டும் வீட்டுக்கு திரும்புகையில் தன் மனைவிக்காக ஒரு பூங்கொத்து வாங்கினான். விற்பனை பெண்மணி அட்டையில் என்ன எழுத வேண்டும் என கேட்டாள். அவன் புன்னகையுடன் “மரணம் நம்மை பிரிக்கும் வரை தினமும் உன்னை காலையில் தூக்கி சுமப்பேன்" என்று எழுதி கேட்டான். மாலையில் பூங்கொத்தோடு முகத்தில் புன்னகை சுமந்தபடி மாடிப்படிகளில் ஏறத்தொடங்கினான் .... இதற்கு மேல் கதையை தொடர்வது அவசியமற்றது என்பதால் விட்டுவிடுகிறேன்
நம் வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன வாழ்வியல் விசயங்களே உறவுகளை பலப்படுத்தும் மிகப்பெரிய ஆயுதமாய் இருக்கிறதேயன்றி வீடோ, காரோ, சொத்துக்களோ, வங்கியில் பணமோ அல்ல. வாழ்க்கையில் விட்டுக்கொடுத்தலால் வரும் வெற்றியை அறியாதவர்களே பெரும்பாலும் தோற்றுப் போகிறார்கள். நம்மில் எத்தனை பேர் இன்று நம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தால் பெரும்பான்மையோர் அந்த நிலையிலேயே தான் இன்றும் உழன்று கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. கனத்த இதயத்தோடு ஒரு பெருமூச்சு மட்டுமே விட முடிகிறது .
// பொன்னான தருணங்களை ஒருவருக்கொருவர் மதிக்கவில்லை என்பது தான் உண்மை... ///
ReplyDeleteஅப்பட்டமான உண்மை... அந்தப் புரிதல் இருந்தாலே போதும்...
நன்றி...:)
Deleteஇது கதையல்ல... பல இடத்திலும் உண்மை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அவனின் மார்பில் சாய்ந்து கொண்ட போது
ReplyDeleteஅவளின் வாசம் அவனைத் தாக்கியது ....
ஐந்தாம் நாளில் தங்களுக்குள் நெருக்கம்
மலர்வதை உணர்ந்தான் ....!
மன்னிப்புக் கோரியவனை கன்னத்தில்
அறைந்து விட்டு தனியறையில் போய்
விம்மி அழுதாள் ..... !
மரணம் வரை உன்னை சுமப்பேன் என...,
கதையில் இது நன்னடை !, தூக்கி சுமக்கும்
போதும் , சுமக்கப் படும் போதும் தாங்கள்
குறிப்பிட்ட " வாழ்வியல் " , அர்த்தமுள்ளதாகிறது !
வாழ்கையைத் தொலைத்தவர்கள் , தொலைப்பவர்கள்
உணர வேண்டிய கதை , ( கவிதை ) ...!!
காரும் , பணமும் , வங்கி இருப்பு மட்டுமே
வாழ்கை அல்ல ! விட்டுக் கொடுத்தலால்
வரும் வெற்றியே " வாழ்வியல்" ,
தங்களின் படைப்பும் , அதற்க்கான படமும்
அழகும் , அருமையும் ...
வாழ்த்துக்கள் .. மீரா மேம் ........................பதி
உங்கள் விமர்சனத்துக்கு நன்றி பதி சார்...
Deleteஇந்தக் கதையை பலமுறை முக நூலில் ஆங்கிலத்தில் கொஞ்சம் வேறு விதமாகப் படித்திருக்கிறேன் . தமிழில் உணர்வு பூர்வமாக இருந்தது.
ReplyDeleteஉண்மை தான் மேடம்... மனதை பாதித்த கதைகளில் இதுவும் ஒன்று...
Delete