Monday, 7 April 2014

தேடலின் பாதையில்


நெடியதொரு நடைப் பயணத்தின்
களைப்பு தீர சற்று ஓய்வாய்,
கிளை பரப்பி செழித்து படர்ந்ததொரு
அடர்மரத்தினடியில் அமர

தாழ்ந்து வளைந்ததொரு கிளையில்
வந்தமர்ந்ததொரு பெயர் தெரியா வெண் பட்சி
என்னை நோக்கி சில கேள்விகனைகளோடு

கேள்விகளில் ஒன்றாய்
பிறப்பின் காரணம் யாதென கேட்க
சற்றே குழப்பமாய்
பிற உயிர்க்கு உதவிடவென பதிலுரைத்தேன்

ஒரு புன்னகையை உதிர்த்த படி
தாவரவினம் செய்யுமதை என கூற
ஒப்புதலாய் தலையசைத்தேன்

அன்பு செய்தலென நினைக்கும் போதே
ஐந்தறிவே போதுமென செயலற்றேன்

நெடியதொரு தேடலின் பாதையில்
மனம் செல்ல
எதிரமர்ந்த பறவையின் பெயர் கேட்டேன்
தேடிக் கண்டுகொள்லென சிரித்துப் பறந்தது

அமர்ந்தது போதி மரமாய் இருக்குமோ!!!
அல்ல எதிரமர்ந்தது
மனமெனும் ஞானப் பறவையாய் இருக்கக் கூடுமோ !!!




6 comments:


  1. பெயர் தெரியா வெண் பட்சியின் கேள்வி
    பிற உயிர்க்கு உதவிடவென பதிலுரைத்தேன் !!

    அன்பு செய்தலென ஐந்தறிவே போதுமென
    ஆறாம் அறிவாய் பதில் !
    போதி மரத்தில் அமர்ந்த ஞானப் பறவை !

    தத்துவமாய் , அழகிய தமிழ்துவமாய் , அருமையாய்
    ஓர் இனிய படைப்புக் கவிதை மேம் !! ..............................பதி

    ReplyDelete
    Replies
    1. நன்றி பதி சார்...

      Delete
  2. நல்ல தேடல்! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ் சார்...:)

      Delete
  3. அப்துல் ரஹ்மான்8 April 2014 at 02:53

    கருத்தோவியம்! எண்ணத்திலும் எதர்தளிதளிலும்! அழகிய படைப்பு

    ReplyDelete