கையிலெடுத்த புத்தகத்தை
கடமைக்காய் பாதி பக்கங்கள்
வரை வாசிக்க
புரியவில்லையென,
சுவாரசியங்கள் இருப்பதாய்
தெரியவில்லையென,
எழுத்துக்கள் தெயளிவில்லையென,
வேறு வேலைகள் இருப்பதாய்
காரணங்கள் பல கண்டு,
பக்கங்களின் அடையாளமாய் அட்டையை வைத்தோ
குப்புற கவிழ்த்தவிட்டோ
அல்லது இனி எதற்கு
சுவாரசியமற்ற இதை படிக்கவென
அடுக்கில் அடுக்கிவிடும் போதே
தெரிந்து விடுகிறது புத்தகத்திற்கும்
திரும்ப படிக்கபோவதில்லையென
தவிர்த்த பக்கங்களில் தான்
நீங்கள் தேடிய கதையின் சாரமென
மௌனமாய் பரிதாப படுகிறது
அப்புத்தகம்
உங்களுக்காகவும்
கொஞ்சமாய் தனக்காகவும்!!!
தவிர்த்த பக்கங்களில் இருக்கும் சாரத்திற்காய் எல்லாம் படிக்கவேண்டும் என்கிறீர்கள்....
ReplyDeleteஆம் ... பத்து பக்கங்கள் படித்து சுவாரஸ்யம் இல்லை என்று நாம் படிக்காமல் விட்ட புத்தகங்கள் எத்தனை... அவைகளில் கடைசி நாலு பக்கத்தில் தான் கதைக்கான திருப்புமுனையே இருக்கும்...
Delete