முகம் கானா என் முகநூல் ஆன்மா, திருமதி சுந்தரி கதிர்
https://www.facebook.com/sundarichalliah
அவளின் பார்வையில் காதல் என்பது என்ன என்று தன் அழகிய சொல்லாடல்களுடன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டதை உங்களுடன் பகிர்கிறேன்
காதல்.....அனல் கொல்லும் பனி மொழி
உச்சரிக்கும் போது உள்ளாடும் நாக்கு
கீழ் மேலாய் தட்டி .......
உதடுகள் இணையாமல் உள்ளங்கள் இணையும் மொழி
வார்த்தைகளுக்குள் அர்த்தங்களாய் சிறை படுத்தமுடியாத
மெளனத்தில் தான் உன்னை அழகாய் பேசமுடியும்
வெட்கம் தருகிறாய்...வேகம் தருகிறாய்
முடிவில் வேதனையும் தருகிறாய்
ஆனால் அத்தனையும் இனிக்க இனிக்கவே......
சிலருக்கு தவிப்பு ..பலருக்கு தேடல் நீ
காதலே உனது பொருள் அன்புஎனில்
பலரில் நீ இன்னும் வேணும் வேணும்
என்கிற ஏக்கக் குறையே
காதலே நீ பாசம் எனில்...
உன்னில் வழுக்கி விழுந்தவர் ஏராளம்
காதலே ..கலவி தான் உன் முடிவெனில்
உன்னை முழுமையாய் உணராத
தன்னை தான் ..உன்னோடு கடக்க முடியாத
உணர்வு வக்கிரப் பள்ளவிழும்
வாய்சவடால் வீரர்கள் இங்கு அதிகம்
அடி முடி காணாத ஆதாம் ஏவாள் பிரியமே
நீ பிறவிகள் மண்ணில் தோன்ற
வித்திட்ட விதையா ...இல்லை விதை கொழுத்த கனியா
பிரிய பிரிய பிரியம் வளர்க்க உன்னால் மட்டுமே இயலும்
ஒருவிழி மோதலில் ..ஒரு மொழி ஆசையில்
மடி கொடுத்து குழைய களிப்பூற வைத்து சிகரம் வளைக்கும் வல்லைமையும் நீயே
கண்ணுக்குள் கத்தி குத்தி கண்ணீர் உதிரம் வரவழைக்க
நீ மறுத்து செல்லும் ஒரு அலட்சியம் போதும்
உன்னை தீண்டாத பருவம் ஆண்//பெண்ணில் இங்கு இல்லை
உன் பெயர் எழுதி வைத்து எத்தனை பேர் தற்கொலை செய்தினும்
உன்னை சிறையில் போட்டு கழுவில் ஏற்ற ஒருவருக்கும் துணிவு இல்லை
ஒரு கைகுலுக்கலாய்..ஒரு கனிந்த குழைவுகளாய்
ஒரு ஆர்ப்பாட்டமாய்..ஒரு அமைதியாய்
ஓர் ஆனந்தமாய்..ஓர் ஏமாற்றமாய்.............
மனித உரு தழுவி....மனங்களில் நீ வாழ்ந்துகொண்டு இருக்கிறாய்
அரும்பு மூச்சு விடும் பூக்களிலும்
பூ தொடரும் பிஞ்சுகளிலும்
பிஞ்சு பருவம் பழுக்கும்
வயதுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் புனிதமே
உன்னை ஏன் நான்
நான் என்னும் என்னை முழுவதுமாய் மறந்து
நீயே சரணாகதியென பதி பற்றும்
இறைப்பிரியம் எனக் கூறக் கூடாது
ஆம்
எனது கனவுகளில்..நினைவுகளில் ..நிஜங்களில்
நிகழ்வுகளில் நீக்கமற நிறைந்து ......
மொழிகளில் போதையேற்றி தள்ளாடும்
என் விதவிதமான ’’கரைகாணா நேசம்’’ எனும் ஆளுமையே
நீ எனக்கு...என்றும் என்றென்றும்
எட்டியாபுரத்து செல்லம்மாவின் கணவனை.....
முண்டாசுக் கவிக் காதலனை மூச்சு முட்டுத் தழுவிய
கற்புக்கரசி கனவு கண்ணம்மா...வழிவந்த
அன்புருகி நான் ஊன்மறக்கும்
நேச இறையெனும் ஆலயமே.........
நிமிட நிமிட நான் உனை நேசித்து..
மொழிதொட்டு பூஜிக்க
இது போன்று
தனி ஒரு நாள் எனக்கு இனி வேண்டுமோ ,,
என் சுவாச நேசமே.......!!!
// அன்புருகி நான் ஊன்மறக்கும்
ReplyDeleteநேச இறையெனும் ஆலயமே... //
நன்றாகச் சொன்னீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
நன்றிகள் சார்...:)
Deleteகாதலை போற்றுவோர்க்கு தனியாக ஒரு
ReplyDeleteநாள் வேண்டுமா ? நல்ல கேள்வி
உதடுகள் இணையாமல் இணையாமல்
உள்ளங்கள் இணையும் மொழி !
காதலே நீ பாசம் எனில் உன்னில் வழுக்கி
விளுந்தவர் ஏராளம் ...!
உன் பெயர் எழுதி வைத்து எத்தனையோ பேர்
தற்கொலை செய்த போதும் ..உன்னைக்
கழுவேற்ற ஒருவருக்கும் துணிவுமில்லை ....
'"காதலைப் போற்றுவோர்க்கு தனியாக ஒரு
நாள் வேண்டுமா "..நல்ல கேள்வி
எட்டியாபுரத்து செல்லம்மாவின் கணவனை.....
முண்டாசுக் கவிக் காதலனை மூச்சு முட்டுத் தழுவிய
கற்புக்கரசி கனவு கண்ணம்மா.
அன்புருகி நான் ஊன் மறக்கும் நேச
இறையேனும் ஆலயமே ....
இந்த உண்மைக் காதலைப் போற்றுவதற்கு
ஒரு நாள் போதுமா ...நல்ல கேள்வி
சுவாச நேசம் ..நேச சுவாசம்
இந்த கவிஞர் தங்களுக்கு உயிர்
நட்பு என்பது தங்களுக்கு பெருமை
"எண்ணத் தூரிகையில் "
தங்களின் முகநூல் ஆன்மா -சுந்தரிக் கதிர்
அவர்கள் பதிந்த முதல் பதிவு ..
வாழ்த்துக்கள் .................................பதி