அவர்கள் அருந்துவதற்கு காப்பி தயாரித்து காண்ணாடி , பீங்கான், வெள்ளி, போன்ற விலை உயர்ந்த கோப்பைகளிலும் அன்றாடம் உபயோகிக்கும் சில வகை கோப்பைகளிலும் எடுத்து வந்து மாணவர்களின் முன் வைத்தார் .
மாணவர்கள் எல்லாரும் அவரவர்க்கு ஒவ்வொரு கோப்பையை கையில் எடுத்துக்கொண்டனர்
பேராசிரியர் மாணவர்களிடம் , நான் உங்கள் அனைவரையும் கவனித்துகொண்டு தான் இருக்கிறேன் . நீங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு விலையுயர்ந்த கோப்பையில் உள்ள காப்பியை பருக எடுத்துகொண்டீர்கள்
அனைவருமே பகட்டான மதிப்பு மிக்க கோப்பைகளையே விரும்புகிறீர்கள். அதுவே மன அழுத்தத்திற்கும் பதற்றங்களுக்கும் அடிப்படை காரணமாக அமைகிறது.
உங்களுடைய தேவை காப்பியே அன்றி கோப்பைகள் அல்ல என்றாலும் நீங்கள் அனைவரும் பகட்டையே விரும்புகிறீர்கள் .
நம் வாழ்வென்பது காப்பியை போல என்றால் , வேலை, பணம், புகழ், அந்தஸ்த்து, நேசம் போன்றவை அனைத்தும் காப்பியை தன்னுள் நிரப்பிக் கொள்ளும் ஒரு கருவியே.
பணம், புகழ், அந்தஸ்த்து போன்ற கோப்பைகளுக்கு அடிமையாகாமல் வாழ்வெனும் பானத்தை பருகி ருசியுங்கள் ( ருசிப்போம் நாமும் )
#ஒரு_ஆங்கில_கதையின்_மொழி_தழுவல்
உணர வேண்டிய ரகசியம்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ஆம் தனபாலன் சார்...:)
Deleteஅருமையான படைப்பு
ReplyDeleteஎல்லோர் மன நிலையும் இதே போலதான்
ஆடம்பரமான கோப்பைகளைத் தான் தேடும் .
ஒரே பானம் பருகும் கோப்பை மாறுபடும்
போது சுவையோ தன்மையோ மாறுவதில்லை !
எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது அத்தனையும்
சுவை ஒன்றாகும் -சித்திரக் கின்னத்தில் பேதமில்லை
உன் சிந்தையிலே தான் பேதமடா ..என கவியரசர் சொல்லுவார்
வேலை, பணம், புகழ், அந்தஸ்த்து, நேசம் இவை அனைத்தும்
ஒரு கருவியே எனும் இந்தப் பதிவு வாழ்வியல் ரகசியம் !
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில்
இயற்றல் வேண்டுமென்றார் பாரதி மகாகவி !!
ஆங்கில படைப்பை தமிழ் படுத்தி இங்கே பதிவிட்ட
மீரா மேம் க்கு பாராட்டுக்கள் !! தங்களின்
மொழித் தழுவல் அருமை !
நன்றி சார்...:)
Delete