Wednesday 16 October 2013

என் வீட்டு தேவதை


''கை கால் முளைத்த
மூன்றாம் பிறை ஒன்றை
பிரம்மன் எனக்கிங்கு
பரிசளித்தான்.

அத்தை என்று
நீ அழைக்க
ஆயுள் கொண்டு
காத்திருப்பேன்...

உன் நிறம் கண்டு
ரோஜாவும்
வெட்கிப் போனதோ ?

மொழியில்லா
உன் குரல் கேட்டு
குயில் கூட
கூவ மறந்ததோ?

மின்மினி போல் நீ
கண் சிமிட்டும்
அழகு பார்த்து
விண்மீன்கள் ஒளிந்து
கொண்டதோ?

உன் எச்சில் சுவை
அறிந்தபின் நான்
தேன்சுவை யதையும்
மறந்தேனடி...

மயிலிறகே மென்மை
என்றிருந்தேன் உன்
மேனி தொட்டுப்
பார்க்கும் வரை...

உறக்கத்தில் உன்
தாத்தா கதை சொல்ல
கேட்டு நீ
சிரிக்கின்றாயோ?

நீ உதடு சுழித்து
அழும்போது என்
மனம் இங்கு
அழுகின்றதடி...

மருமகளாய் வந்த
என் தேவதையே
மாமன் உனக்கிட்ட
பெயர் 'சிந்தனா'..

ஆனாலும்
நீ பூமி வரும் முன்
என் அப்பனும்
வந்தபின் உன் அப்பனும்
உன்னை அழைப்பதென்னவோ
என் பெயர் சொல்லித்தானடி...

பாசக் குவியல்களை
சேகரித்துக் காத்த
சிற்பக் கலசமடி
நீ எனக்கு.!!!!

23 comments:

  1. குழந்தைகள்னாலே அழகு, அதுலயும் குழந்தைகள வர்ணிப்பதுனா கேக்கவா வேணும். சூப்பரா இருக்குமா

    ReplyDelete
    Replies
    1. நன்றி டா காயு ....

      Delete
  2. கை கால் முளைத்த தேவதைக்கு சிறகு முளைத்த கவிதை வரிகள் .. அழகு !

    ReplyDelete
  3. Replies
    1. எப்படி என்று தெரியவில்லை ... உங்களுக்கு தெரிந்தால் சொல்லித்தரவும் ரிஷபன் ....

      Delete
  4. அப்பன்கள் பெயர் சொல்லி அழைப்பதை அழகாக பதிவு செய்துள்ளது கவிதை!@stalin saravanan

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்டாலின் சரவணன்...

      Delete
  5. Replies
    1. நன்றி வெங்கடேசன் ...

      Delete
  6. அழகான கவிதை, புதிதாய் பிறந்த மலருக்கு

    ReplyDelete
  7. நன்றி ஜீவா .....

    ReplyDelete
  8. pudhu varavu..boomiku..kai..kaal.mulaitha..kavithai..kuzandai..

    ReplyDelete
    Replies
    1. கவிக்குழந்தை மட்டும் இல்லை .. என் மருமகளும் கூட ... என் தம்பியின் மகள் ...பிரசன்னா ...

      Delete

  9. சிந்தனாவுக்கு உன் சிந்தையில் உதித்த கவிதை அருமை..

    ReplyDelete
  10. sindana..sinadanain..raniyaval..vaazthukkal..vazka..nee..emman

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பிரசன்னா .... நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு ....

      Delete
  11. சோலை மலரே ! சுவர்ணத்தின் வார்ப்படமே !
    காலை இளஞ் சூரியனை காட்டும் பளிங்குருவே !
    உங்கள் வீட்டு தேவதை சிந்தனாவுக்கு வாழ்த்துக்கள் ...பதி

    ReplyDelete
    Replies
    1. நன்றி பதி ஐயப்பன் .... உங்கள் வாழ்த்திற்கும் ....

      Delete
  12. மயிலிறகே மென்மையென்று
    எண்ணியிருந்தேன் - உன்
    மேனி தொட்டுப்
    பார்க்கும்வரை..

    அருமை.
    மயிலும் மகிழும்....

    ReplyDelete
    Replies
    1. என் செல்ல மருமகள் அவள் ஷன்முகமூர்த்தி சார்... நன்றி ....

      Delete
  13. வலைச்சர அறிமுகம்,,வாழ்த்துகள்.

    ReplyDelete