Tuesday 29 October 2013

நெருப்பு






பஞ்சபூதங்களின் ஒன்றுதான் நெருப்பு.

பொதுவாக எல்லாவற்றையும் பொசுக்கிப் போடுவதுதான் நெருப்பின் குணம்.

விளைவு ஒன்று எரிந்து சாம்பலாகும். உலோகம் போன்றவை உருகி ஓடும். ஆனால் மண்ணை மட்டும் அதிலும் குறிப்பாக களிமண்ணை முற்றிலும் வேறு விதமாக மாற்றிவிடுகிறது நெருப்பு.

களிமண்ணாக இருக்கும் போது அது நீரில் கறைகிறது. கெட்டித் தன்மை கிடையாது. ஈரப்பதம் வற்றிப் போனால் பொடிந்துத் துகளாகி போய்விடும்.


இந்த அடிப்படை குணங்களை கொண்ட களிமண் நெருப்பால் சுடப்பட்டால் அதன் இளக்கத் தன்மை மாறி கெட்டித்தன்மை பெறுகிறது. நீரில் கரையாத தன்மையையும் பெறுகிறது.


இப்படி நெருப்பால் புது வடிவம் கொள்ளும் களிமண் தான் நாம் வீடு கட்டப் பயன்படும் செங்கலாகிறது. நீர் சேகரிக்கும் பாண்டமாகிறது. சமையல் செய்யும் பாத்திரமாக மாறுகிறது.


நெருப்பு களிமண்ணை மட்டுமே தனது வெப்பத்தால் இவ்வளவு சிறப்புடையதாக மாற்றுகிறது. மற்றவற்றையெல்லம் எரித்து பஸ்பமாக்கிவிடுகிறது.


மண்ணை நெருப்பால் எரிக்கும் வித்தையை கண்டடைந்த பின் தான் மனிதசமூகம் ஒரு மிகப் பெரிய சாதனையை சாதித்தது.

அறிவில்லாதவனை பார்த்து உன் மண்டையில் களிமண்ணா இருக்கிறது? என்று திட்டுகிறோமே ஏன் தெரியுமா? கல்வி என்னும் நெருப்பில் சுடப்படும் போது தான் அறிவு வேறொரு பரிமாணத்தை பெறுகிறது என்பதின் வெளிப்பாடே அது.



4 comments:

  1. நல்லதொரு பரிமாணம்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி .... தொடர்ந்து வாசித்து விமர்சியுங்கள் ....

      Delete
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நானும் அறிந்து கொண்டேன் ... மிக்க மகிழ்ச்சி ...

      Delete