Monday, 21 October 2013

மனஉளைச்சலில் (STRESS) இருந்து வெளிவர சில வழிமுறைகள்.


வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் மறைமுகமான ரூபத்தில் ஏற்படக் கூடிய நன்மையைப் பற்றியே சிந்தியுங்கள் .

கடந்த காலங்களில் செய்த தவறுகளைப் பற்றி பட்சாதாபப்படாதீர்கள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப் படாதீர்கள் .உங்கள் கையில் இருக்கும் நிகழ்காலத்தை வெற்றியாக்குவதில் முழு கவனம் செலுத்துங்கள் .

நீங்கள் உங்கள் வாழ்க்கையை பிறருடன் ஒப்பிட்டு கவலைப் படாதீர்கள். ஏனெனில் நீங்கள் இந்த உலகில் தனிச் சிறப்புள்ள மனிதர் . உங்களைப் போல வேறு யாரும் இருக்க முடியாது .

உங்களை நிந்திப்பவர்களே உங்கள் நண்பர்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் .ஏனெனில் அவர்கள் உங்களிடம் இருந்து விலையேதும் பெறாமல் மனோதத்துவ மருத்துவரைப் போன்று உங்களது குறைகளின் பக்கம் உங்களின் கவனத்தை கொண்டு செல்கிறார்கள் .

உங்களுக்கு துக்கம் கொடுக்கக் கூடியவரை மன்னித்து விடுங்கள் , அதனை மறந்தும் விடுங்கள் .

அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண முயற்சித்து குழப்பமடைய வேண்டாம் . ஒரு நேரத்தில் ஒரு பிரச்சனையை மட்டும் தீர்க்க முற்ப்படுங்கள் .

முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் கவலைகளை மறக்ககூடும் .

வரக்கூடிய பிரச்சனைகளைப் பார்க்கக் கூடிய கண்ணோட்டத்தை மாற்றுவதன் மூலம் நீங்கள் துக்கத்தை சுகமாக மாற்றம் செய்ய முடியும் .

எந்த பிரச்சனைகளை உங்களால் மாற்றமுடியாதோ அதைப் பற்றி சிந்தித்து துக்கப் படாதீர்கள் . காலம் பொன் போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

இந்த உலகம் என்னும் விசாலமான நாடகத்தில் நாம் அனைவரும் நடிகர்கள் . அவரவரது பாகத்தை சரியாக நடித்துக் கொண்டிருக்கிறோம் . எனவே பிறரது நடிப்பை பார்த்து கவலைப் படவேண்டாம் .

பிறரை மாற்றவேண்டும் என்ற இச்சையின் மூலமாக மானசீக மனஇறுக்கம் அதிகரிக்கிறது . முதலில் தன்னை மாற்றிக்கொள்ளும் இலட்சியம் வைப்பதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் .

பொறாமைப் படுவதால் மனமானது எரிகிறது .அதை மனதில் இருந்து நீக்கினால் மனம் அளவற்ற குளிர்ச்சியை அனுபவிக்கிறது .

மகிழ்ச்சி கொடுப்பதன் மூலமே மகிழ்ச்சி அதிகரிக்கும் .ஆகையால் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்க முயற்சி செய்யுங்கள் . ஒருபொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்கும் சிந்தனையே செய்யாதீர்கள் .

பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ளும் பொழுது உங்களது கடந்தகால கர்மத்தின் கணக்குகள் (எதிர்மறையான வினைப் பயன்) முடிந்துகொண்டிருக்கிறது என்று நினைவுகொள்ளுங்கள் .

உங்களுக்குள் இருக்கும் சூட்சும அஹங்காரத்தை தியாகம் செய்யுங்கள் . வரும் பொழுது எதுவும் கொண்டுவரவில்லை . திரும்பும் பொழுதும் எதுவும் கொண்டுசெல்ல மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

தினமும் சிறிது நேரமாவது யோகா மற்றும் தியானம் பயிற்சி செய்யுங்கள் .இதனால் உடல் மற்றும் மன இறுக்கத்தில் இருந்து விலகி ஆரோக்கியம் பெறலாம் .
12 comments:

 1. இந்த உலகம் என்னும் விசாலமான நாடகத்தில் நாம் அனைவரும் நடிகர்கள் . அவரவரது பாகத்தை சரியாக நடித்துக் கொண்டிருக்கிறோம் . எனவே பிறரது நடிப்பை பார்த்து கவலைப் படவேண்டாம்/// எனக்கு எல்லா லைன்ஸ்ம் பிடிச்சுருக்கும்மா.... மனச லேசா வச்சுக்கிட்டா எதுவுமே பாரமா இருக்காது

  ReplyDelete
  Replies
  1. தேங்க்ஸ் டா காயு மா ... உண்மை தான் டா ...

   Delete
 2. அனைவரும் உணர வேண்டிய வழிமுறைகள்...

  Followers ஆகி விட்டேன்... இன்று முதல் உங்கள் தளத்தை தொடர்கிறேன்... நன்றி...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்... தங்கள் ஆதரவிற்கும் ....

   Delete
 3. ungal pathivai padippathu muthal murai madam. rompa elimaiya ella vatraiyum sollitinga.. thodarungal..

  ReplyDelete
  Replies
  1. நன்றி மகேஷ்... தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ....

   Delete
 4. வணக்கம்
  இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்..பார்வைக்கு
  http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_30.html?showComment=1383099548945#c5143564545881580038
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபன் சார்....

   Delete
 5. வலைச்சரத்தின் மூலம் இங்கு வந்தேன். வாழ்த்துகள்!
  அருமையான பதிவு..சொல்லியது அனைத்தும் உண்மைதான்...நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி க்ரேஸ் ... தொடர்ந்து எல்லா பதிவுகளையும் படித்து கருத்திடுங்கள் ....

   Delete
 6. மிக அருமையான ஆலோசனைகள்! பகிர்வுக்கு நன்றி! தொடர்கிறேன்!

  ReplyDelete
 7. மிக நல்ல ஆலோசனைகள்... வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete