Monday 17 August 2015

தந்தைக்கு முதலாம் நினைவஞ்சலி 19-9 -2013






உயிர் தந்தவனின் உயிர் பிரிந்த நாள்.


அப்பா எனும் உருவில் வந்த என் தெய்வம் நீ.


ரூபமாய் என்னை பாதுகாத்த நீ
இப்போது அரூபமாய் என்னை சுற்றி
பாதுகாப்பு கவசமிட்டிருக்கிறாய் .


எப்படி வாழ்வேன் உன்னை பிரிந்து என
அரற்றிய என்னை
இது தான் வாழ்வின் நியதி என
உணர்த்த சென்று விட்டாய் .


இல்லாள் இல்லா இடம்
சொர்க்கமே இல்லை என்றுரைக்கும் நீ ,
நீ இருக்கும் இடத்தை சொர்க்கமாக மாற்ற
உன்னவளையும் அழைத்துக்கொண்டாய் .


மெய்யால் என்னை விட்டுச் சென்ற நீ
நினைவுகளில் என்னுள் உறைந்தே இருக்கின்றாய்
இனி ஒரு பிறவி ஒன்றிருந்தால்
மீண்டும் உன் வீட்டின் இளவரசியாய்
எனை ஈன்றிடும் வரம் வாங்கி வா எந்தையே ....

9 comments:

  1. தெய்வமாய் நின்று உங்களை காப்பார்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  2. இளவரசியாய் இருக்கும் உமக்கு
    முகவரி என்னும் முத்தத்தை
    மணிமகுடத்தில் மதித்து விட்டு சென்றுள்ளார்.
    தந்தை என்னும் மந்திர சொல் வாழ்வின் நல்வழிக்கு வழி காட்டும்!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  3. கவிதை அருமை.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வலிகளை வார்த்தைகளில் சிறிது இளைப்பாற்ற இவ்வரிகளை கையாண்டேன். மகிழ்ச்சி

    ReplyDelete
  5. பிரிவு
    மரணம் மூலமாக...
    ஜீரணிக்க
    யாராலும் முடியாததே!

    தந்தை
    மட்டுமின்றி தாய்...
    இருவரையும்
    இழந்து நிற்கும் நிலை...
    ஆற்றமுடியாதது!

    ஆறுதல்
    வார்த்தைகள் ஒரு சடங்கே..
    ஆறுதல்
    பெற்றாக வேண்டும் என்பதோ
    வாழ்வின் கட்டாயம்!

    காலை மலரும் பூவோ....
    மாலையில் உதிர்கிறது!
    அதற்குத் தெரியும்.....
    மாலை மரணம் என்பது!

    மரண நேரம் தெரிந்த மலரோ...
    சிரித்து விளையாடுகிறது!
    அதனால் அது அன்றாடம் கவியாகிறது!
    கருகினாலும் வாழ்கிறது கவிதையில்!

    மனிதனுக்கோ
    மரண நேரம் தெரிவதில்லை....
    மரணம்
    வரும்போது தாங்க முடிவதில்லை!

    தாங்கித்தான் ஆகவேண்டும்....
    ஆறுதலடைந்தேயாகவேண்டும்!
    ஆறுதலடைக....
    உள்ளத்தைத் தேற்றுக....
    வலிவலையிலிருந்து வெளியே வருக!

    போனவர்கள் போகவில்லை....
    அகத்தில் இருப்பார்கள்....
    வழி காட்டி வழி நடத்துவார்கள்!

    அவர்தம் ஆன்மா நிந்திய சாந்தி
    பெறட்டும்....
    ஓம் சாந்தி சாந்தி சாந்திகி ஓம்!

    ReplyDelete
  6. பிரிவு
    மரணம் மூலமாக...
    ஜீரணிக்க
    யாராலும் முடியாததே!

    தந்தை
    மட்டுமின்றி தாய்...
    இருவரையும்
    இழந்து நிற்கும் நிலை...
    ஆற்றமுடியாதது!

    ஆறுதல்
    வார்த்தைகள் ஒரு சடங்கே..
    ஆறுதல்
    பெற்றாக வேண்டும் என்பதோ
    வாழ்வின் கட்டாயம்!

    காலை மலரும் பூவோ....
    மாலையில் உதிர்கிறது!
    அதற்குத் தெரியும்.....
    மாலை மரணம் என்பது!

    மரண நேரம் தெரிந்த மலரோ...
    சிரித்து விளையாடுகிறது!
    அதனால் அது அன்றாடம் கவியாகிறது!
    கருகினாலும் வாழ்கிறது கவிதையில்!

    மனிதனுக்கோ
    மரண நேரம் தெரிவதில்லை....
    மரணம்
    வரும்போது தாங்க முடிவதில்லை!

    தாங்கித்தான் ஆகவேண்டும்....
    ஆறுதலடைந்தேயாகவேண்டும்!
    ஆறுதலடைக....
    உள்ளத்தைத் தேற்றுக....
    வலிவலையிலிருந்து வெளியே வருக!

    போனவர்கள் போகவில்லை....
    அகத்தில் இருப்பார்கள்....
    வழி காட்டி வழி நடத்துவார்கள்!

    அவர்தம் ஆன்மா நிந்திய சாந்தி
    பெறட்டும்....
    ஓம் சாந்தி சாந்தி சாந்திகி ஓம்!

    ReplyDelete
  7. ஒவ்வொரு பிரிவும் நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்தியே செல்கின்றது.அவர்கள் வழிப்படுத்தியபடி வாழ்ந்து நன்றி செலுத்துவோம்

    ReplyDelete