Saturday 28 December 2013

அன்பதிகாரம் 2



#அன்பெனப்படுவது காதோடு கதை சொல்வது போல் வந்து கழுத்தோடு முகம் புதைப்பது...

#அன்பெனப்படுவது உண்ணும் உணவில் உப்பு அதிகமென்பதை. உன்னை ஒருபோதும் மறவேன் என நாசூக்காய் சொல்வது...

#அன்பெனப்படுவது செல்லப் பெயராய் உன்னை செல்லமென்றழைப்பது ...

#அன்பெனப்படுவது உண்ணும் உணவின் முதல் கவளத்தை ருசி பார்த்து பின் ஊட்டிவிடுவது...

#அன்பெனப்படுவது கையில் வைத்திருக்கும் ஒரு கல்கோனா மிட்டாயை காக்காய் கடி கடித்து தோழனோடு பகிர்ந்து கொள்வது ..

#அன்பெனப்படுவது விதையில் இருந்து துளிர்க்கும் தளிர்களை விரல் கொண்டு மென்மையாய் வருடுவது ...

#அன்பெனப்படுவது முகமறியா அகங்களுக்காய் மனம் கலங்குவது...

#அன்பெனப்படுவது நகம்வெட்டி தேடும் போது விரல் பிடித்து நகம் கடித்துவிடுவது ...

#அன்பெனப்படுவது மதங்கள் கடந்து பண்டிகை நாட்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்வது...

#அன்பெனப்படுவது உன் நிழலை அளவெடுத்து ரசிப்பது ...



4 comments:

  1. அருமையாகச் சொன்னீர்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அன்பெனப் படுவது ;உண்ணும் உணவில் முதல்

    கவளத்தை ருசி பார்த்து பின் ஊட்டுவது ..அருமை

    நாம் ஊட்டும் உணவு சூடாக இருக்கா ! காரமாக இருக்கா !

    குழைவாக பிசைந்துள்ளோமா ! சுவை பரிசோதித்து

    ஊட்டவே ஒரு கவளம் ருசித்து பின் ஊட்டுவது .அன்பு

    அன்பெனப் படுவது அருமை !! அன்பதிகாரம் மேலும்

    வேகமாக வெளியிட தங்களை கேட்டுக் கொள்கிறேன் ........
    ----------------------------------------------------------------------------------------------
    காதோடு கதை சொல்வது போல் கழுத்தோடு

    முகம் புதைக்கும் படம் அதுவும் அன்பெனப் படுவது ..!!

    படத்துக்கான இடுகையா ? இடுகைக்கான படமா ?

    பொருந்த தேர்ந்தீர் ! சிறப்பாய் !!!........................பதி

    ReplyDelete
    Replies
    1. நன்றி பதி சார்... அன்பதிகாரம் எழுத நீங்களும் ஒரு காரணம்.... நன்றி உங்கள் ஆதரவுக்கு....

      Delete