Sunday 29 December 2013

சின்ன சின்ன ஆசைகள்


கொஞ்சும் மழலையாய் மாறிவிட ஆசை

வண்ணத்துப்பூச்சியாய் தேன்சுவைக்க ஆசை

மொட்டில் இருந்து பூவாய் வெடித்திட ஆசை

கயல் போல நீரில் நீந்திட ஆசை

விண்மீனாய் வானில் உறைந்திட ஆசை

மயில் போல தோகை விரித்தாட ஆசை

மான் போல துள்ளி குதித்தோட ஆசை

கிளி போல கிள்ளை மொழி பேச ஆசை

குயில் போல கானம் பாடிட ஆசை

வானவில்லை உடையாய் அணிந்துகொள்ள ஆசை

நிலவின் மடியில் கண்ணுறங்க ஆசை

அன்பெனும் குடைக்குள் உலகை அடைத்திட ஆசை.!!!




6 comments:

  1. ரசிக்க வைக்கும் ஆசைகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ஆசையான ஆசை ,
    கயல் போல நீரில் நீந்திட ஆசை ,
    மயில் போல தோகை விரித்தாட ஆசை ,
    குயில் போல கானம் பாடிட ஆசை ,
    வானவில்லை உடையாய் உடுத்திக் கொள்ள ஆசை ,
    நிலவின் மடியில் கண்ணுறங்க ஆசை ,
    -----------------------------------------------------------------
    நியாமான பேராசை
    தன்னலமில்லா பொது நல ஆசை ...!
    "அன்பெனும் குடையில் உலகை அடைத்திட ஆசை " !
    பேராசை நிறைவேறிட வாழ்த்துகிறேன் ......பதி !

    ReplyDelete
    Replies
    1. அன்பு கொள்ளவதே இப்போதெல்லாம் பேராசையாகி விட்டது பதி சார்....

      Delete