Thursday 9 January 2014

காலத்தின் ஒரு துளி



தூளி கட்டிய ஆடிய
தாய்மாமன் வேஷ்டி,
பாலருந்திய கென்டி,
பாட்டியால் மருந்து புகட்டிய சங்கு,
குட்டையாய் போன பட்டு பாவாடை சட்டை,
உடைந்த ஸ்லேட்டின் சட்டம்,
எழுதிக் கரைந்த பென்சில்கள் ,
பொலிவிழந்த தொங்கட்டான்கள் ,
தங்கையோடு விளையாடிய ,
மரச்செப்பு சாமான்கள் ,
அப்பா வரைந்த ஓவியம் ,
அம்மா எழுதிய டைரி குறிப்புகள் ,
செல்லரித்து போன
தாத்தா பாட்டியின் திருமண புகைப்படம்,
இது போல இன்னும் பல .....

உபயோகப் படாதென்றாலும்,

கடந்து விட்ட காலங்கள்
விட்டு சென்ற நீங்கா நினைவுகளாய்
பெருவெளியின் ஒரு ஓரத்தில் (பரணில்)
என்னின் பொக்கிஷங்களாய் !!!

6 comments:

  1. பழைய நினைவை கிளறும் அவைகள் கண்டிப்பாய் பொக்கிஷங்கள்தான்! அருமை! நன்றி!

    ReplyDelete
  2. என்றும் அவை ரசிக்க வைக்கும் பொக்கிசங்கள் தான்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்...:)

      Delete
  3. மாமனின் வேஷ்டி ,
    கெண்டி ,சங்கு ,
    பட்டுப் பாவடை ,சட்டை
    சிலேட்டுச் சட்டம் ,
    தொங்கட்டான் ,
    மரசெப்பு சாமான் இவை
    அனைத்தும் ஒரு தலை முறை மட்டுமே
    பழையது!!,... பரணுக்கு போய்விட்டது

    அந்தப் பரண் இன்று பல வீடுகளில் இல்லை
    தாங்கள் குறிப்பிட்ட இந்த பொருள் எல்லாம்
    தொல் பொருள் ஆகலாம் !! இனி நினைவுகளில் மட்டும் !!......பதி

    ReplyDelete
    Replies
    1. நன்றி பதி சார்...

      Delete