Wednesday 26 February 2014

தேடல்...சுகமா? சுமையா?



தேவைகள் எதுவென்றறியாமலே 
தேடல்களை தொடங்கிவிடுகிறோம்.

தேவைகள் யாதென தெரிந்து 
தேடும் வேளைகளில் 
தெரிந்து விடுகிறது 
இருத்தலும் இல்லாமையும் 

எப்போது , எங்கே, யாரால் , எப்படி , தொலைத்தோம் 
என்பதை உறுதிபடத் தெரியாமல் 
அவநம்பிக்கையோடு அயர்ந்தமர செய்கிறது 
நம் இயலாமை 

கண்டெடுத்திடும் தருணங்களுக்கு நிகராக
நம் கவனத்தை ஈர்ப்பதில்லை 
காணாமல் தேடிய பொழுதுகள்

தொலைந்த ஏதோவொன்று 
தன்னை தேடுவாரற்று 
புதைந்து போயிருக்கலாம் 
அதன் துயர் மிகு ஓலக் கூக்குரல் 
உரிமையாளரை சென்றடையாமல் போயிருக்கலாம் 

புதிய வரவுகளால் கவனிப்பாரற்று 
புறந்தள்ளப்பட்டிருக்கலாம் 
கண்ணெதிரே இருந்தும் 
பொலிவிழந்த அதனிருப்பு 
தன்னை அடையாளப் படுத்த தவறியிருக்கலாம் 

இருத்தலும் இல்லாமையும்
ஒன்றென உணர்வது வலி மிக்கது...



6 comments:

  1. கற்பிதமாக ஒன்றை உருவாக்கி கணக்கு போடத் தொடங்கினால், தெரியாதவற்றிலிருந்தும் தெரிந்து கொள்ள முடியும்...! இல்லாதவற்றிலிருந்தும் இருப்பதை கண்டு கொள்ள முடியும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சார்...:)

      Delete
  2. ஆம் வலி மிகுந்ததுதான் ...இருத்தலும் இல்லாமையும் குறித்து உணரும்போது

    ReplyDelete
    Replies
    1. நன்றி எழில் மேடம்...:)

      Delete
  3. கண்டெடுத்திடும் தருணங்களுக்கு நிகராக
    நம் கவனத்தை ஈர்ப்பதில்லை
    காணாமல் தேடிய பொழுதுகள் !!

    தொலைந்த ஏதோவொன்று தன்னை தேடுவாரற்று -
    புதைந்து போயிருக்கலாம் !! எதார்த்தமான உண்மை !

    புதிய வரவுகளால் கவனிப்பாரற்று புறந்தள்ளப்பட்டிருக்கலாம் !!

    பொலிவிழந்த அதன் இருப்பு -பழையன எல்லாமே பொலிவிழந்து
    போகுமே -அருமையான சிந்தனை !!

    தேடல்
    சுகமா ?
    சுமையா ? நல்ல கேள்வியுடன்
    தங்களின் கவிதை அழகாய்
    அமைந்துள்ளது ! வாழ்த்துகள்
    மேம் ..............பதி

    ReplyDelete
  4. நன்றி பதி சார்..

    ReplyDelete