Thursday 17 July 2014

இனியவளின் பிறந்தநாள்....


என்னவள் Sundari Kathir..... 
தன் எழுத்தென்னும் நேசக் கரம் கொண்டு 
அனைவரையும் கட்டி போட்டவள்....
கண்ணில் படும் காட்சிகள் அனைத்திலும் 
தன் நேசப் பார்வை செலுத்தி 
உயிர்பித்து விடுபவள்...
இன்று (17-7-14) பிறந்தநாள் ... 
என்னோடு இணைந்து வாழ்த்துங்கள் தோழமைகளே ...

அன்பின் ப்ரியங்கள் சுமந்த அன்பானவளுக்கு ஆயிரம் முத்தங்கள்
பிறந்த நாள் வாழ்த்துகள் டா செல்லம்

முகமறியா முகநூலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்
அன்னையின் வரமாய் கிடைத்தவள் நீ
ஒன்றாகக் கைகோர்த்து வலம்வந்தது கிடையாது- இருந்தும்
சுனை நீராய் சுரந்தது நம் அன்பின் ஊற்று
முகநூல் வீதிகளில் திரும்பிய பக்கமெல்லாம்
நம் இருவர் பேர் சொல்ல
அன்பின் நேசமாய் உலாவருகிறோம்

ஆயிரம் சுமைகள் உனக்குண்டு - அதனுடன்
பல நேரங்களில் என் சுமையும் சேர்த்து சுமந்தவள் நீ

வலி என்று நான் தவித்த நேரங்களில்
மயிலிறகின் தீண்டலாய்
உன் வார்த்தைகளே என் வலி நிவாரணி

எனக்கே தெரியாமல்
என்னை சுற்றி பின்னப்பட்ட
மாய வலைகளை அறுத்தெரிந்தவள் நீ
என் மேல் விழும் பழிச்சொல் அம்புகளை
என் நிழல் கூட தீண்டா வண்ணம் தாங்கி
வந்த இடம் நோக்கி திருப்பி அனுப்பியவள்

அன்பை வார்த்தைகளில் காட்டதே
செயல்களில் உணர்த்து என்று
"அதிமுக்கியமானவள்" நீ எனக்கு என
என்னை உணர செய்தவள்

ஈரைந்து மாதங்கள் என்னை சுமந்தவள்
காற்றோடு கலந்த வேளையில்
வாவென அவளை அழைத்து
நீ சுமந்தவளை இனி நான் சுமக்கிறேன்
மகளாக எனக்கு தத்து கொடு என
என்னை மனதால் மடி சுமந்தவள்

பாசத்தை பனித்துளிக்குள் உறைய வைத்து
பதறாமல் பகிர்ந்தளிக்கவும்
சிரித்துக்கொண்டே கண்டிக்கவும்
கோபத்தோடு கொஞ்சவும்
உனக்கு மட்டுமே சாத்தியப் படுகிறது

கண் படுமோ , இல்லை சொல் படுமோ என்று
எல்லோரும் பெருமிதமாய் பேசும் நம் அன்பின் ப்ரியங்கள்
இனியும் யார் கண்ணும் சொல்லும்
படாமல் காக்க நம் அன்னையிடம் பிரார்த்தனைகள்

வரும் ஜென்மங்களில்
ஒரே கருவறையில்
உதிரம் பகிர்ந்த சொந்தமாய்
பிறவி வேண்டி
நம் அன்னையிடம் வரம் வேண்டி
வாழ்த்துகிறேன் செல்லம் ...

இன்று மலர்ந்த அரும்பாய் என்றும் நீ மணக்க
அன்னையின் அருளோடு என் ப்ரிய முத்தங்கள் செல்லம்
உம்ம்ம்மம்ம்ம்மாஆஆஆ .
லவ் யூ டி செல்லம் ... லவ் யூ டி அம்மா....

உன் அதிமுக்கியமான மீரா.


10 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களருமைத்தோழிக்கு.

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி.... நலமா....

      Delete
  5. பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் .. விலைவாசி போல சந்தோஷங்கள் உயர்ந்துகொண்டே போகட்டும் , கரெண்ட் போல கஷ்டங்கள் குறைந்துகொண்டே போகட்டும் .

    ReplyDelete