Friday 28 March 2014

கான்கிரீட் காடுகள்



நெடுந்தூர ஜன்னலோர பயணத்தில்
இப்போது ரசிப்பதற்கொன்றுமில்லை

ஊர் எல்லை தாண்டி வரும்
இருள் காடுகளைக் கடக்கும் போதெல்லாம்
மரங்களின் ஊடே ஊஞ்சல் கட்டி
ஆட தொடங்கிவிடுகிறது மனசு

ஆடும் போதே
கிளைகளுக்கிடையே
கீழிறங்கும்
நிலவொளியின் அழகில் மயங்குவதும்,

தவழும் பனிக் காற்றை
கை விரித்து தழுவிக் கொள்வதும்,

கூதலுக்கு இதமாய்
கைகள் தேய்த்து கன்னத்தில் ஒற்றிக் கொள்வதும்,

உவர்மண்ணின் மணத்தோடு
பசுமரத்தின் மணத்தை சுகமாய் சுவாசிப்பதும்
முன்னொரு காலாமாகிவிட்டது

மனிதம் தொலைத்த மனங்களைப் போலவே
பசுமையிழந்து மூச்சுத் திணறுகிறது
வனமெங்கும் விதைந்தெழுந்த
கான்கிரீட் காடுகளால்...


4 comments:

  1. வருத்தப்பட வேண்டிய உண்மை...

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டமைக்கு நன்றி சார் ...

      Delete
  2. கான்கிரிட் காடுகளால் பசுமை மறைந்தது நெஞ்சை சுடும் விசயம்! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete