Tuesday 8 April 2014

பெண்மையின் அடையாளம்


சுமந்தோ
சுமத்தப் பட்டோ
நத்தையின் ஓடு

தன்னுடன் பயணித்து வரும் போது
சுமையாகவும்
பலரை ஈர்க்கும் அழகானதொரு கூடாகவும்

ஓடில்லா நத்தை கற்பனைக்கு எட்டவில்லை
உடனிருக்கும் அதன் அடையாளமாய்

கூட்டிற்கான நகலாய்
பெண்களின் வரையறைகள்
சுமந்தோ- அல்லாமல்
சுமத்தப் பட்டோ

ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும்
சில நேரங்களில் சுமையாகவும்
அவளின் அடையாளங்களாகவும்

8 comments:

  1. அருமை தோழி

    ReplyDelete
  2. சில நேரங்களில் சுமையாகவும் அவளின் அடையாளமாகவும்.... அருமை...

    ReplyDelete
  3. நத்தைக் கூடு பெண் ஒப்பீடு சிறப்பு! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete