பகட்டான மாளிகையில்
பட்டாலும் , பொன்னாலும்
அலங்கரிக்க பட்ட
அன்பால் ஏழையாக்கப் பட்ட
சிறு பெண் நான்
ஏக்கப் பார்வையொன்றை
ஜன்னல் வழி வீசிய படி
அருகில் உள்ள ஓலைகுடிசையில்
சந்தோஷத்தின் இளவரசியாய் வலம் வரும்
என் வயதொத்தவளை பார்த்தபடி
உதிரம் பகிர்ந்தோரோடு
வாசல் முற்றத்தில் கூடி களிக்க
நான் மட்டும் தனியறை சிறையில்
என் தோழமை பொம்மைகளுடன்
தந்தை மேல் அம்பாரி ஏற
தாய், உணவோடு அன்பை ஊட்ட
நானோ மாடிபடிகளின் விளிம்பில்
ஆயா தரும் ரொட்டி துண்டுகளை
வெறுப்புடன் பார்த்த படி
ஜன்னல் வழி வெறித்த என்னை
கையசைத்து விளையாட அழைத்தாள் அவ் இளவரசி
மான்குட்டியாய் துள்ளி ஓடினேன்
அவள் மாளிகை நோக்கி
என் ஆடை அணிகளைத் தொட்டு தடவி
நீ இளவரசியோ என கேட்க
அன்பால் நான் ஏழை என்றுரைத்தேன்
வா , நேசம் பகிர்வோம்
என்றென்னை அணைத்துகொண்டாள்
நானும் கூடுடைத்த பறவையானேன் .
Arumai meera
ReplyDeleteநன்றி வெங்கடேசன்....
Deleteநன்றி தனபாலன் சார்... தொடர்ந்து வாசித்து கருத்து தெரிவிக்கவும் ....
ReplyDelete