இல்லையென நான் மறுக்க
என்னில் நினைவுகளாய்
நிரம்புகிறாய்
கல்லெறிந்த நீர் திவலைகளாய்
அலையுதென் மனம்
நீ விதைத்துச் சென்ற
காதல் விதையொன்று
கிளைபரப்பி
அகண்ட விருட்சமாய்
வேரூன்றி நிற்கிறதெனக்குள்
அம்மரக் கிளை அமர்ந்த
மனப் பறவையை தூதாய்
அனுப்பிவைத்தேன் உன்னிடம்
அண்ட பெருவெளி சுற்றி
உன்னிடம்
அடைக்கலமானது அப் பறவை
தஞ்சம் வந்த பறவையை
நெஞ்சஅணைத்துக்கொள்ளடா ...
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி....:)
Deleteஇல்லை என மறுத்த காதல் ,நீர்த் திவலையாய் சின்னச் சலனம் ,
ReplyDeleteகாதல் விதை மரமாகி ,மரக் கிளைக்கு மனப் பறவையை தூதாய்
அனுப்பும் அளவுக்கு வளர்ந்து விட்டது -இல்லை என மறுத்த காதல்
---கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் ...அருமையான கவிதை
கருத்துக்கு நன்றி சார்....:)
Deleteஹஹஹா அந்த பக்கம் நின்னு கை விரிச்சுட்டு இருக்குறது தெரியுதா
ReplyDeleteஹஹஹா.... தெரியுது டா...
Delete