Sunday, 22 December 2013

காத்திருப்பின் அவஸ்தைகள்



பெருமழையில் நனைந்த
சிறு பறவையாய்
சிலிர்கிறதென் மனம்

நேர்கொண்ட பார்வை,
நிமிர்ந்த என் நடை,
கனவுகளற்ற நித்திரை,
ஆழ்மன தியானம்...

ஏதும் சாத்தியமாகா
இவ்வேளையில்

கவனப் பிசகில் கல்லில் இடறி
பின் கல்லை நோவதாய்,
என்னை குறைசொல்ல
ஏதுவாய் இருந்ததுனக்கு

எப்போது நீயறிவாய்
உனக்காக என் காத்திருப்பின்
அவஸ்தைகளை ...



4 comments:

  1. உனக்காக காத்துக் கிடப்பதால்
    என் தனித் தன்மை எல்லாமே
    இழந்து விட்டேன் ...
    நிமிர்ந்த நன் நடை
    நேர்கொண்ட பார்வை
    கனவுகளற்ற நித்திரை
    ஆழ்மன தியானம்
    அனைத்தையும் இழந்து விட்டேன் !!
    இதில் கல்லில் இடரும் கவனக்
    குறைவு வேறு ..
    எப்போதறிவாய்
    உனக்காக என் காத்திருப்பின்
    அவஸ்த்தைகளை ....
    கவனமாக பின்னப் பட்ட
    கவிதை பூச்சரம்
    அழகான வார்த்தைகளால்
    கோர்த்தெடுத்த பாச்சரம்
    அருமை கவிஞரே ! அருமை !!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பதி சார்.... தொடர்ந்து விமர்சியுங்கள்...:)

      Delete
  2. Replies
    1. நிஜம் தானே தனபாலன் சார்??? நன்றி கருத்திட்டமைக்கு ....

      Delete