Tuesday, 17 December 2013

அன்பதிகாரம்-1



#அன்பெனப்படுவது கண்ணாமூச்சி ஆடும் போது அம்மாவின் முந்தானை சேலைக்குள் ஒளிந்துகொண்டு அவளின் வாசம் சுவாசிப்பது ...

#அன்பெனப்படுவது அப்பா குடிக்க தண்ணீர் கேட்கும் போது ஒரு வாய் குடித்துவிட்டு கொடுப்பது...

#அன்பெனப்படுவது நான் மனதில் நினைத்ததை நீ வார்த்தைகளில் சொல்லும்போது நெகிழ்ச்சியடைவது ...

#அன்பெனப்படுவது மழலையின் அக்கும் எனும் அழகிய நாதத்தில் மனம் நெகிழ்வது ...

#அன்பெனப்படுவது நீ கோபப்படும் போது உன் மூக்கின் நுனி பற்றி இழுப்பது ...

#அன்பெனப்படுவது நீ சீண்டும் போது வெட்கி முகம் ஒளித்துக்கொள்ள இடம் தேடி உன் மார்பிலேயே முகம் புதைத்துக்கொள்வது...

#அன்பெனப்படுவது தூக்கதில் குழந்தையை போல நீ சிரிக்கும் அழகை பார்த்து ரசிப்பது...

#அன்பெனப்படுவது எல்லாம் தெரிந்தும் நீ சொல்லும் அழகை ரசிக்க ஒன்றும் தெரியாதது போல உன்னிடம் கதை கேட்பது...

#அன்பெனப்படுவது தலைவலி எனும் போது தலைவருடி நெற்றியில் இதழ் ஒற்றி எடுப்பது...

#அன்பெனப்படுவது அலைபேசியில் உன்னை அழைக்கவேண்டும் என்று நினைக்கும் போதே உன்னிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருப்பதாய் என் அலைபேசி சத்தமிடுவது...


4 comments:

  1. அன்னபெனப் படும் புதுக் குறள் தொகுப்பு விரைவில் புத்தகமாய் வெளியிட வாழ்த்தி வணங்குகிறேன் ......பதி

    ReplyDelete
    Replies
    1. நன்றி பதி சார்...

      Delete
  2. அருமை... அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்....

      Delete