Friday, 27 December 2013

அமைதியின் ஒரு துளி




இன்றும் தொடர்ந்து கொண்டே...
நேற்றில் முடியா எனது பொழுதுகள்.

ஏனென்று புரியாமலே ...
இது நேற்றோ அன்றி அதன் முன்தினம் போல!!

நேற்றைகளின் பிரதிபலிப்பாகவே அமைந்து விடுகிறது பல நேரங்களில் இன்றும்...

மணித்துளிகள் நிமிடங்களோடும் ,
நிமிடங்கள் நாட்களோடும்
நாட்கள் , வாரங்களாய் ,
அதுவே மாதங்களோடு கண்ணாமூச்சி விளையாடுகின்றது.

தெளிந்த நீரோடையாய் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை
கல்லெறிந்த நீர் திவலைகளாய் குழம்பி
சலித்துவிடுகிறது சில நேரங்களில் ...

விம்மி வெடிக்கின்றன சில மனதை அழுத்தும் நினைவுகள் ...

அதன் தாக்கத்தை எதிர் கொண்டு
அமைதியின் ஒரு துளியில் கரையும் நான் ...


4 comments:

  1. நினைவுகள் ஓய்வதில்லை...

    ReplyDelete
    Replies
    1. நீங்காத நினைவுகள்....:)

      Delete
  2. தெளிந்த நீரோடையாய் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்கை

    கல்லெறிந்த நீர்த்திவலையாய் குழம்பி

    சலித்து விடுகிறது சில நேரங்களில் ...

    விம்மி வெடிக்கின்றன சில மனதை அழுத்தும் நினைவுகள் ...

    நல்ல கவிதையும் அதற்கு பொருத்தமான படமும் ......
    --------------------------------------------------------------------------------------
    சீரான எண்ணைகளை ,வண்ணங்களாய்

    தூரிகையில் தோய்த்தெடுத்து

    ஆய்ந்து , அளவெடுத்து வரையும்

    நல்லோவியம் ...."எண்ணத்தூரிகை" இதில்

    கவிதைச் சாரல் ,ஸ்ரீயும் நானும் ,அன்பதிகாரம் ...

    இவைகளை சேமிக்கும் பெட்டகம் -இந்த

    எண்ணத் தூரிகை சிறக்க வாழ்த்துகிறேன் ....பதி

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்.... உங்க கருத்துக்களுக்காகவே இன்னும் யோசிச்சி எழுதணும் சார்....

      Delete