Thursday 6 March 2014

கதகதப்பில் கரையும் நான்....


பனி போர்வை போர்த்திய
குளிர் பிரதேசத்தின் சன்னலொன்றை
தன் நலிந்த கரம் கொண்டு தட்டுகிறான்
உச்சிவேளை கதிரவன்

தடுப்புக்களையும் ஊடுருவி
அறையெங்கும் வியாபிக்க காத்திருக்கிறது
அதனின் வெம்மை

அதன் கதகதப்பில் என்னை இழக்க
மொத்தமாய் பனியை வெறுத்திட துணிகிறேன்

கதகதப்பின் உச்சத்தில்
நான் கரைந்து கொண்டிருக்க ,

கண்களுக்கு புலபடா
ஏதோவொரு இடுக்கின் வழியில்
மெல்ல கசியும் ஊதல் காற்று...
நான் கரையும் சாத்தியக் கூறுகளை
வேரறுத்துக் கொண்டிருக்கிறது!!!


4 comments:

  1. அழகிய கவிதை! (”கண்களுக்கு புலபடா ”என்பது ”கண்களுக்கு புலப்படா” என்றிருக்கவேண்டும் அல்லவா?)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.. திருத்திக் கொள்கிறேன் ... நன்றி ...:)

      Delete