எழுத்துக்களில்
தேடினேன் உன்னை
கவிதையாய்
என்னுள் ஊற்றெடுக்கிறாய்
உன் அன்புச் சாரலில்
நனைந்திட தேடினேன்
அடைமழையாய் வந்தெனை
ஆலிங்கனம் செய்கிறாய்
வெளிச்சம் வேண்டி
விளக்கொன்று தேடினேன்
விண்மீன்களாய்
எனை பார்த்து
கண்சிமிட்டுகிறாய்
கனவில்
உன்னை நாடிக்
கண் மூடினேன்
நிஜமாய் அருகில் வந்து
மெய் சிலிர்க்க செய்கிறாய்
என்னை விட்டு
எங்கெங்கோ தேடியிருக்கிறேன்
நீ எனக்குள் ஒளிந்திருப்பதை
அறியாமலேயே.. !!!
எப்பவுமே ஒளிச்சு வச்சுட்டு அப்புறமா தேடுறதே நமக்கு வாடிக்கையா போச்சு போல ஹஹா
ReplyDeleteஹஹ்ஹா...:)
Deleteகடைசிவரிகள் கலக்கல்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்... தொடர்ந்து வாசியுங்கள் ...:)
Delete