தென்றலென பிறந்து
முகிலோடு கலந்து
கார்மேகமாய் உருவெடுத்து
பூஞ்சாரலாய்
எம் சுவாசம் வருடி
வானவில்லின் ஜாலத்தோடு
பெருமழையாய்
பூமியை முத்தமிட்டு
மலைகளில் அருவியாய்
ஆர்ப்பரித்து
காடுகளில் நதியாய்
நடனமாடி
கடல் அன்னையில்
சங்கமித்து
சூரியக் காதலனின்
அன்பு தீண்டலில்
மீண்டும் மீண்டும்
குளிர் வாடலாய் பிறக்கிறாய்!!!
ரசித்தேன்... படமும் அருமை...
ReplyDeleteநன்றி தனபாலன் சார் ...
Deleteஅம்மா, சூப்பர்...
ReplyDeleteதேங்க்ஸ் டா ...:)
Deleteதென்றலனப் பிறந்து ,முகிலொடு கலந்து ,கார்மேகமாய் மாறி ( மாரி )
ReplyDeleteபூஞ்சாரல் ,பெருமழை ,மலை அருவி .,காட்டு நதி ,கடல் அன்னை -
மீண்டும் வானமேறி ...மழையாய் அருமை !!!! மீரா மேடம் .
நன்றி பதி சார்...:)
Delete