இளையவளாய் பிறந்தும்
மூத்தவள் போல்
மிடுக்கோடு
அரவனைப்பில்
அன்னையை தோற்கச்
செய்கிறாய் !!
தந்தையாய் தோளணைத்து
தைரியம் சொல்கிறாய்
தமயனாய் அதிகாரம் செய்து
பூப் போல எனை பாதுகாக்கிறாய்!!
போலியாக என்னுடன்
போட்டிபோட்டு பின்
எனக்கே நீ விட்டும் கொடுக்கிறாய் .
நான் கண் கலங்கினால்
நீ மனம் கலங்கி விடுகிறாய் !!
தோழியாய்
என் துயர் களைய
எத்தனிக்கிறாய்
குழந்தையாய் என் மடியமர்ந்து
குறும்புகள் பல செய்கிறாய் !!
நிஜத்தில் விலகி
நினைவுகளில்
என்னை ஆரத்தழுவும்
என் செல்ல சுந்தரத் திலகமே
சில நேரங்களில்
இந்த அணைப்புக்காக
உயிரும் உடலும்
ஏங்கித் தவிக்கிறது .!!!
அழகான நட்பும் பாசமும்
ReplyDeleteநன்றி ராஜசேகரன் சார்..
Deleteசகோதரியாய் வந்தவள் தோழியாய் மாறி விட்டாளோ?
ReplyDeleteதோழியாய் வந்தவள் யாதுமாகி விட்டாள் .
Deleteபோட்டி போட்டுட்டு விட்டுக்குடுக்குற சுகமே தனி, இல்லையாமா
ReplyDeleteஆமா டா... அதை அனுபவிச்சி பார்க்கும் போது தான் உணர முடியும் காயு மா ...
Deleteநட்பு என்றால் துயரங்களில் தோளணைத்து, சந்தோஷத்தில் பங்கெடுத்து, விட்டுக்கொடுப்பதிலும் முன் நின்று, நல்லவை எடுத்துச்சொல்லி, இப்படி எல்லாமுமாக இருக்கும் நட்புக்கு தரும் மேன்மை சுந்தரிக்கதிர் தான் என்று படித்ததுமே கண்டுப்பிடிச்சிட்டேன் மீரா... என்றென்றும் உங்கள் நட்பு இறையருளால் நிலைத்து நிற்க மனம் நிறைந்த அன்பு பிரார்த்தனைகளுடனான வாழ்த்துகள்பா...
ReplyDeleteநன்றி மஞ்சு ....
Deleteஊனை வருத்திடும் நோய் வரும் போதினில் உற்ற மருந்து சொல்வான்;-நெஞ்சம்
ReplyDeleteஈனக் கவலை எய்திடும் போது போதினில் இதஞ் சொல்லி மாற்றிடுவான் ;...மகாக்கவி
அரவணைப்பில் அன்னையை தோற்கச் செய்த ,நான் கண் கலங்கினால் மனம் கலங்கும்
என் சுந்தர திலகமே !!சுந்தர திலகம் ... நட்பு ,நேசம்,பாசம் ,அன்பு .....வாழ்த்துக்கள்
நன்றி பதி ஐயப்பன் ....
Deletearumai meera blosoom !!! yendrum pasamalargal aga yen vazthukal
ReplyDeleteநன்றி வெங்கடேசன் ...
Delete