Friday, 25 October 2013

பூம்பூம் மாடு




பூம்பூம்மாடு சிறு பிராயத்தில் கிராமத்தில் அடிக்கடிப் பார்த்தது.
இப்போது எல்லாம் கண்ணில் படுவதேயில்லை.

முதுகின் மேல் வேலைப்பாடுகளுடன் கூடிய துணி மற்றும் பல நிறங்களில் புடவைகள் போர்த்திவிட்டு,அழகாக அலங்காரம் செய்யப்பட்டு, கழுத்தில், உடம்பில், கொம்புகளில் சலங்கைக்கட்டி,பலூன் கட்டி, பூ மாலை மற்றும் இன்னும் பிற மாலைகள் எல்லாம் போட்டு அலங்கரிக்கப்பட்டு, "ஜில் ஜில் ஜில்" சத்தத்துடன் மாட்டை ஓட்டிவருவார்கள்.

ஓட்டிவருபவரும் முண்டாசு கட்டி, காலில் சலங்கை க்கட்டி, கையில் ஒரு பீப்பியுடனும் வருவார். பீப்பியால் ஊதுவார். நடுநடுவே மாட்டிடம் பேசுவார், கேள்விக்கேட்பார். அதற்கு மாடும் "பூம் பூம்" என்ற குழல் சத்தத்திற்கு ஏற்ப தலையாட்டும்.

இந்த சத்தம் தெருவில் கேட்டால் போதும், ஓடி போய் நின்று மாடு தலையாட்டுவதைவேடிக்கைப் பார்ப்பது அன்றைய நாள் சிறுவர்களுக்கு வழக்கம். பூம்பூம் மாட்டுகாரருக்குப் பணமோ, அரிசியோ தருவார்கள்.பெரும்பாலும் அரிசியாகத் தான் இருக்கும், தோளில் மாட்டியிருக்கும் ஒரு ஜோல்னா பையை திறந்துக்காட்டி அரிசியை வாங்கிக்கொள்வார். அதில் வெள்ளை, பழுப்பு, சிவப்பு என விதவிதமான அரிசி வகைகள் போடப்பட்டு இருக்கும்.

ஊர் ஊராகச் சென்று வீட்டுக்கு வீடு தேடிப்போய் மேளம் கொட்டிக் கதைப்பாடல்கள் உள்ளிட்ட வாய்மொழிப் பாடல்கள், திரைப்பாடல்கள் ஆகியவற்றைப் பாடி யாசகம் பெற்று அதன் மூலம் வாழ்க்கை நட்த்துகின்ற ஒருவகை நாடோடி இனமக்கள் தான் இந்த பூம்பூம் மாட்டுக்காரர்கள்.

 பூவிடையார் என்ற பூக்கட்டும் இடையர் இனத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பது ஆய்வார்களின் கூற்று.

பூம் பூம் மாடுகளைக் கொண்டு குறி சொல்லுவதைப் குலத் தொழிலாகக் கொண்டுள்ளனர் இவர்கள்.

கோவில் விழாக்கள், மக்கள் கூடுமிடங்கள் ஆகியவற்றிக்கு சென்று அல்லது வீடு வீடாகச் சென்று வித்தை காட்டுவது இத்தொழில் ஈடுபடுவர்களது வழக்கம். அலங்கரிக்கப்பட்ட மாட்டிடம் குறி சொல்பவர்


கேள்விகேட்பதும்,அக்கேள்விகளுக்கும் ஆம் அல்லது இல்லை என்பது போல மாடு தலை ஆட்டுவதைக் கொண்டு குறி பலன்களைச் சொல்வர். அனைத்து விசயங்களிலும் வாய் பேசாமல் தலையை ஆட்டும் நபரை “பூம் பூம் மாடு” என்று கிண்டலாக அழைக்கும் வழக்கம் இன்றும் நம்மிடையே உள்ளது.

இந்த வித்தியாசமான காட்சிகளை எல்லாம் காணும் வாய்ப்பு இன்றைய பிள்ளகளுக்கு இல்லாமல் போய்விட்ட்தே என்று நினைக்கையில் மனது கொஞ்சம் வலிக்கதான் செய்கிறது.

7 comments:

  1. ம்... அது அந்தக் காலம்... சந்தோசக் காலம்...!

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் கனாகாலமாகி விட்டது தனபாலன் சார்...

      Delete
  2. ninga eluthum pathivukal ellam nalla irukku madam. ningal tamil manam thiratiyil ungal blog serkka kudatha innum pala vasakarkalai senru adaiyum ungal eluthu

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேஷ்... எனக்கு தமிழ் மனத்தில் ப்ளாக் ஐ எப்படி சேர்க்க வேண்டும் என்ற விபரம் தெரியவில்லை... அறிந்துகொண்டு கட்டாயம் சேர்த்துவிடுகிறேன் .... தொடர்ந்து வாசியுங்கள் ...

      Delete
    2. மகேஷ், நாங்க முயற்சி பண்றோம், அப்படியும் முடியலனா திண்டுக்கல் தனபாலன் அண்ணாவும், நீயும் இருக்கீங்களே, அப்புறம் என்ன கவலை?

      Delete
  3. நான் இதுவரைக்கும் பூம் பூம் மாடு நேர்ல பாத்ததே இல்லமா :(

    ReplyDelete
  4. இப்போ ரொம்ப கம்மி டா .... ஆனா நம்ம பக்கம் எப்போதாவது வரும் ....

    ReplyDelete