Sunday, 20 October 2013

ஸ்ரீயும் நானும் .





யு கே ஜி படிக்கும் என் தம்பி மகன் ஸ்ரீயும் நானும்


அபார்ட்மென்ட்டில் உள்ள சஜ்ஜஷன் பாக்சை பார்த்து

ஸ்ரீ :இது என்ன அத்தம்மா?

நான்: நம்ம குறைகளையும் அவங்க செய்ற நல்ல விசயங்களுக்கு தேங்க்ஸ் சொல்லியும் இதுல லெட்டர் எழுதி போடலாம் .அதுக்காக வச்சிருக்காங்க . இதை சஜ்ஜஷன் பாக்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க கண்ணா .

ஸ்ரீ :அப்போ நாங்களும் கரெக்டா தான் செய்துருக்கோம்.

நான்:என்னடா கண்ணா செஞ்சிங்க?

ஸ்ரீ : எங்க ஸ்கூல்லில் உள்ள பாக்ஸ்ல நாங்களும் லெட்டர் எழுதி போட்டுருக்கோம்

நான் : எப்போ டா ?

ஸ்ரீ : எக்ஸாம்முக்கு முன்னாடி அத்தம்மா.

நான் :என்ன டா எழுதி போட்டேங்க , யார் எல்லாம் எழுதி போட்டேங்க ?

ஸ்ரீ : லீவ் வேணும் ட்வென்டிபைவ் டேஸ்க்கு வித்அவுட் ஹோம் வொர்க்னு , நானும் என் கூட இன்னும் அஞ்சு பாய்ஸ்சும் ரெண்டு கேர்ள்ஸ்சும்.

நான்:நேம் எழுதி போட்டீங்களா ? யாரும் பாக்கலையா ?

ஸ்ரீ : நாங்க என்ன லூசா அத்தம்மா? யாரும் பாக்காத போது தான் போட்டோம் . நேம் எழுதினா கிளாஸ்ல வந்து திட்டுவாங்கனு எழுதல.

நான் :ஏன் கண்ணா இப்படி செய்த ?

ஸ்ரீ : பின்ன என்ன அத்தம்மா. லீவே விடமா கிளாஸ் வைக்கிறாங்க .போர் அடிக்குது . விட்டாலும் ஹோம்வொர்க் குடுதுடுறாங்க .

நான் : இனி இப்படி செய்யாதடா கண்ணா . நான் உங்க மிஸ் கிட்ட சொல்லி லீவ் விட சொல்றேன் .

ஸ்ரீ :சரி அத்தம்மா .

#கல்வியை குழந்தைகளுக்கு விளையாட்டாக புகட்ட வேண்டும் .அதை விட்டு விஷம் போல திணிக்க முற்படும் போது இது போல வெறுப்பே ஏற்படும் .

#லீவ் நாட்களில் ப்ராஜெக்ட் என்ற பேரில் குழந்தைகளை படுத்தி எடுக்கும் பள்ளி நிர்வாகங்கள் இதை கருத்தில் எடுத்து சரி செய்தால் மட்டுமே இந்த வெறுப்பு மாறும் .


10 comments:

  1. UKG லயே இப்படி ஒரு சிந்தனையா.. பேச்சா,, சபாஷ்.

    ReplyDelete
  2. மிஸ் சொன்னா கேப்பாங்க ,ஆனா நிர்வாகம் கேட்க்காது .அவர்களுக்கு அனைத்து மாணவர்களும் நூறு வாங்க வேண்டும் .காலை எழுந்தவுடன் படிப்பு ,பின்பும் படிப்பு ,
    மாலை முழுதும் படிப்பு இரவும் படிப்பு என்று வழக்கப் படுத்தி கொள்ளு பாப்பா !
    ஸ்ரீ சொன்ன முழு விடுமுறையாவது வேண்டும் ...........பதி

    ReplyDelete
    Replies
    1. கல்வி முறையில் மாற்றம் கொண்டுவந்தால் மட்டுமே அது சாத்தியம் பதி ஐயப்பன் சார்..

      Delete
  3. கல்வி முறை சரியாகத்தான் இருக்கிறது. கற்பிப்பவர்கள் இன்னும் அதை செம்மைப் படுத்திக் கொள்ளவேண்டும் என்பதுதான் உண்மை. ஹோம் வொர்க்ஸ் கொடுத்து மாணவன் வீட்டில் அட இது நல்ல ஸ்கூல் போலிருக்கே என்று எண்ணவைப்பதைவிட..இளம்மாணவர்கள் கல்விக்கூடம் எப்போது திறக்கும் என்றி ஏங்கவைக்கவேண்டும்..
    அதிலேதான் பயிற்சியின் வெற்றி அடங்கியுள்ளது. :)

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஷன்முகமூர்த்தி சார்...

      Delete
  4. தனியார் பள்ளியைப் பொறுத்தவரையில் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் ஒரு இயந்திரம். ஆசிரியரின் நிலையும் அங்கு பரிதாபம் தான். காலை 8 மணிக்கு வந்தால் அவர்களும் வகுப்பு முடித்துவிட்டு, பிறகு பள்ளியிலேயே சிறப்பு வகுப்பு எடுத்துவிட்டு வீடு திரும்ப இரவு 8 மணி ஆகிறது. அவர்களுக்கும் வீடு, குடும்பம், குழந்தைகள் என்று இருப்பதை பள்ளி நிர்வாகம் ஏற்பதில்லை.. அப்படிப்பட்ட இயந்திரத்திற்கு மாணவர்களும் மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாகத்தான் தெரிகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. நிஜம் தான் ராஜசேகரன் சார்... நிர்வாகங்களும் அரசும் சேர்ந்து கல்விமுறையில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே இந்த வெறுப்பு மாறும் ...

      Delete
  5. ம்ம் மறுக்கமுடியாத உண்மை. விளையாட்டு வகுப்பைக்கூட பாடம் நடத்த ஏதாவது ஒரு ஆசிரியர் எடுத்துக்கொண்டு விடுகின்றனர். ஆசிரியர், நிர்வாகம் மட்டும் குறைகூற முடியாது. பெற்றோர்களின் பேராசையும் காரணமே.. பள்ளி செல்வது நல்ல மதிப்பெண் எடுக்க, நல்ல மதிப்பெண் நல்ல கல்லூரி கிடைக்க, நல்ல கல்லூரி நல்ல பதவி கிடைக்கவென பள்ளிக்கு அறிவைப்புகட்ட அனுப்பும்போதே எதிர்கால வருவாய் மட்டும் கணக்கில் கொண்டு அனுப்புவதால்...:)

    ReplyDelete
  6. உண்மை காயத்ரி .... வருத்தமான விஷயமும் கூட ....

    ReplyDelete