Monday, 21 October 2013

தியானம்








தியானம் என்பது சிந்திப்பதோ , மந்திரங்களை உச்சரிப்பதோ அல்லது பிரார்த்தனை செய்வதோ அல்ல.

என்னங்களிடமிருந்து விடுதலை பெற்று மனமானது வெற்றிடமாயிருத்தலே தியானம் ஆகும் .

தியானம் என்றால் நம் சுவாசத்தின் மீது நமது முழு கவனத்தை வைத்திருப்பதாகும் . அவ்வாறு மூச்சை கவனித்துக் கொண்டிருந்தால் நமது மனம் எந்த சிந்தனையுமின்றி சாந்த நிலையை அடையும்.

மனம் அந்நிலையை அடையும் போது அளவற்ற விஸ்வசக்தி நம் தலையில் உள்ள பிரம்மரந்திரத்தின் மூலம் உடலில் பாய்கிறது . அந்த விஸ்வசக்தி நமது நாடி மண்டலத்தை சுத்திகரித்து நமது மூன்றாம் கண்ணை இயக்குகிறது.


இந்த விஸ்வசக்தியின் மூலமாக நமக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் அமைதியான மனநிலையும் மற்றும் பல ஆன்மிக அனுபவங்களும் தரும் .

தியானத்தின் பலன்கள்

எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்தும் . நினைவாற்றல் அதிகரிக்கும். மனம் எப்போதும் அமைதியாகவும், அதனால் நிம்மதியாகவும் இருக்கும் . நம் செயல்கள் அனைத்தும் மிக திறமையாக மேம்படுத்தப்படும் . நம் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியும் .

தியானம் செய்யும் முறை

தியானம் செய்வதற்கு சுகஸ்திர ஆசனத்தில் அமர வேண்டும்.

தரையிலோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொள்ளவும்.

பாதங்களை ஒன்றின் மீது ஒன்றாக இணைத்துக்கொள்ளவும்.

இரு கைவிரல்களையும் ஒன்றுடன் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும். உடலை இறுக்கமாக இல்லாமல் தளர்வாக இயல்பாக இருக்கவும்.

பின்பு கண்களை மூடிக் கொண்டு நம்மில் இயல்பாகவும், இயற்கையாகவும், மென்மையாகவும் நடக்கும் சுவாசத்தின் மீது கவனத்தை செலுத்தவேண்டும். மனம் அலைபாயும் போதெல்லாம் அவற்றை தவிர்த்து மறுபடியும் நம் கவனத்தை சுவாசத்தின் மீது மட்டும் செலுத்தவும்.


தியானம் மிக எளிமையானது .தியானம் செய்வதில் எவ்வித சிரமமும் கிடையாது

அனைத்து வயதினரும் செய்யலாம் .தியானம் தவறாமல் செய்ய வேண்டும். குறைந்தது முப்பது நிமிடமாவது செய்ய வேண்டும் .

 "நம் வாழ்வின் வெற்றியை நமது முயற்சியால் நமக்கு நாமே பெற்றுக்கொள்ளும் வரப்பிரசாதமே தியானம்



9:39p

6 comments:

  1. சுருக்கமாக சொன்னாலும் அருமையாக சொன்னீர்கள்... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்... விரிவாக எழுதும் போது படிப்பவர்கள் இப்போதெல்லாம் யோசிக்க அரம்பித்திவிடுகிறார்கள் ...

      Delete
  2. erkanave thiyanam partri nan kelvi pattalum ninga alaka ellarukkum puriyum vakaiyil ezuthi ullirkal thodarungal.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேஷ்.... தொடர்ந்து வாசியுங்கள் ....

      Delete
  3. சூப்பர். எல்லாரும் கண்டிப்பா தியானம் பண்ணனும்

    ReplyDelete
    Replies
    1. நிஜம் டா... மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வை ஏற்படுத்த தியானத்தால் மட்டுமே முடியும் ...

      Delete