தீமைகள் அகன்று உலக மக்கள் நன்மை பெற்ற நாள்
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசைக்கு முந்திய நரக சதுர்த்தசி தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகின்றது. மற்ற பண்டிகைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு தீபாவளிக்கு உண்டு.
மகாவிஷ்ணுவுக்கும் பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் நரகாசுரன்.
இறைவனுக்கு மகனாகப் பிறந்திருந்த போதும், நரகாசுரனிடம் அசுர குணம் தலைத்தூக்கியது. அசுர்களுடன் சேர்ந்து பலவித போர் பயிற்சிகளையும் பெற்றான்.
தன் தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் வரக்கூடாது என்ற வரத்தைப் பிரம்மதேவனிடமிருந்து பெற்றான் .
ஆணவச் செருக்கினால் மக்களைப் பலவாறு துன்புறுத்தினான். தவம் செய்யும் முனிவர்கள், தவச்சீலர்கள், தேவர்கள் என எவருமே அவனுடைய கொடுமைகளிலிருந்து தப்ப முடியவில்லை. அவனுடைய கொடுமைகள் அதிகம் ஆனதால் அதற்கும், அவனுக்கும் முடிவு ஏற்பட வேண்டிய நேரம் நெருங்கியது.
தேவர்களின் தலைவன் இந்திரன், கிருஷ்ணரிடம் சென்று நரகாசுரனின் கொடுமைகளைக் கூறி முறையிட்டார். ஸ்ரீ கிருஷ்ணர், நரகாசுரனுடன் போர் புரியச் சென்றார். அவரது தேருக்குச் சாரதியாக பூமாதேவியின் அம்சமான சத்தியபாமா இருந்தார். போர் கடுமையாக நடந்தது.
இருவரும் பலவித அஷ்திரங்களை ஏவுவதும், தடுத்து நிறுத்துவதுமாக இருந்தனர். அந்தச் சமயத்தில், நரகாசுரன் எய்த அம்பு பட்டு மயக்கமடைந்த கிருஷ்ணர் தேரிலேயே சரிந்தார். இதைக்கண்டு சாரதியாகச் சென்ற சத்தியபாமா, தானே வில்லை ஏந்தினார். தன் தாயின் அன்புக்கு அடிபணியாது அசுரனான நரகாசுரன் அவளின் அம்புக்கு இரையானான்.
பிராம்மாவிடம் தான் பெற்ற வரப்படி தன் தாயாலேயே மரணமடைந்தான். தாயே மகனைக் கொன்றதுதான் தீபாவளிப் பண்டிகையின் விசேஷம்.
அறம் தவறாது இருப்பது மனித குணம். அதைத் தவறி நடப்பவன் மகனே ஆனாலும் தண்டிக்கப்பட வேண்டியவன் என்பதால் பெற்ற தாயே போரிட்டுக் கொன்றாள்.
தன் தாயின் அம்புக்கு அடிப்பட்டு வீழ்ந்த நரகாசுரன் தவறுக்கு வருந்தியதோடு தன்னுடைய இறந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என வேண்டிக் கேட்டான். அவனுடைய பெற்றோர்களும் அதை அங்கீகரித்தனர். மக்களும், மற்றோரும் அசுரனின் துன்பங்களிலிருந்து விடுப்பட்ட நாளை, அவன் விருப்பப்படியே “ தீபாவளி” பண்டிகையாக நாம் கொண்டாடுகின்றோம்
தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய்யைத் தலையில் வைத்து வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரானாலும், குழாய் நீர் ஆனாலும், கிணற்று நீர் ஆனாலும் அதில் தீபாவளி அன்று கங்கை பிரசன்னம் ஆவதாக ஐதீகம்.
பின்னர் பூஜை அறையில் திருமால், மகாலெஷ்மி ஆகிய படங்களின் முன் புத்தாடைகளுக்கு மஞ்சள் தடவி வைக்க வேண்டும். அன்று செய்த பலகாரங்களையும், இனிப்புப் பண்டங்களையும் நெய் வேத்தியமாகப் படைத்து, பூஜைகள் செய்து திருமாலையும், மகாலெஷ்மியையும் வணங்கி, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று புத்தாடைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அன்றைய தினம் குடும்ப உறுப்பினர்கள் புத்தாடைகள் அணிந்து அனைவரும் ஒன்றாக ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கி வழிபாடு செய்வர். பிறகு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இறைவனுக்கு நெய்வேத்தியமாகப் படைத்தவைகளையும் பலகாரங்களையும் சாப்பிடுவார்கள். பட்டாசுகள் வெடித்து மகிழ்வர் .
பண்டிகை நாளில் உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியோரின் இல்லங்களுக்குச் செல்வதும், அவர்கள் நம் வீட்டிற்கு வருகை புரிவதும், பெற்றோர்களும் பெரியவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் அன்பளிப்பு கொடுப்பதும்; பட்டாசு, மத்தாப்பு, வானவேடிக்கைகள் விளையாடுவதும் தீபாவளிப் பண்டிகையின் சிறப்பு அம்சங்களாகும்.
தற்போது தீபாவளியன்று தொலைகாட்சிப் பெட்டிக்குள் முடங்கி போய்விடுகிறார்கள் இன்றைய தலைமுறையினர்.
thithikum..thirunaalam..deepa.oli..thirunalil..manam..muzudum..mathaapagha..thevitatha..thensuvayam..anbai..kooti..pagaimai..enum..kodum asuran..pada padavena..pattasu pol..kaanamal..pogha..endrendrum..punnagai..paadukapanai..deepavali..vaazhthukkal..
ReplyDeleteதங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் பிரசன்னா ...
ReplyDeleteஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன் சார்...
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி ....
Deleteஇனிய தீபாவளி வாழ்த்துகள் அம்மா
ReplyDeleteதேங்க்ஸ் டா காயு மா....
Delete