என் பெயர் சொல்லி
இப்போதெனை அழைத்தாயா
என்றான்
இல்லையடா என்றதற்கு
என் தோட்டத்து மாமரத்தில்
குயிலொன்று கூவிற்றேயென
கன்னம் சிவக்க வைத்தான்
என் காலடி ஓசை கேட்டதும்
துள்ளி குதித்து
ஓடி நீ ஒளிந்தாயா என்றான்
இல்லையடா என்றதற்கு
மானொன்று எனைக்கண்டு
துள்ளி ஓடி ஒளிந்ததென்றான் .
சாரல் மழை கண்டு
களிநடனம் ஆடினாயா என்றான்
இல்லையடா என்றதற்கு
மயிலொன்று
தோகை விரித்தாடக் கண்டேன்
என எனை திகைக்க வைத்தான்
ஐந்தறிவு விலங்கினமல்ல
ஆறறிவு பெண்ணடா
நான் என்றதற்கு ,
பெண்ணல்ல நீ எனக்கு
தேவதையடி என்றுரைத்து
எனை மயங்க வைத்தான்!!!
இப்போதெனை அழைத்தாயா
என்றான்
இல்லையடா என்றதற்கு
என் தோட்டத்து மாமரத்தில்
குயிலொன்று கூவிற்றேயென
கன்னம் சிவக்க வைத்தான்
என் காலடி ஓசை கேட்டதும்
துள்ளி குதித்து
ஓடி நீ ஒளிந்தாயா என்றான்
இல்லையடா என்றதற்கு
மானொன்று எனைக்கண்டு
துள்ளி ஓடி ஒளிந்ததென்றான் .
சாரல் மழை கண்டு
களிநடனம் ஆடினாயா என்றான்
இல்லையடா என்றதற்கு
மயிலொன்று
தோகை விரித்தாடக் கண்டேன்
என எனை திகைக்க வைத்தான்
ஐந்தறிவு விலங்கினமல்ல
ஆறறிவு பெண்ணடா
நான் என்றதற்கு ,
பெண்ணல்ல நீ எனக்கு
தேவதையடி என்றுரைத்து
எனை மயங்க வைத்தான்!!!
பெண்ணல்ல நீ எனக்கு
ReplyDeleteதேவதை // வார்த்தை சதிராட்டத்தில் சிக்கிக் கொண்டது மனசு !
நன்றி ரிஷபன் ...
Deleteஅருமையான கவிதை! வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ் ...:)
Delete