Sunday, 24 November 2013

முத்தச் சிதறல்கள்



பசிக்கிறதென்றதும்

பரிமாற ஏதும் இல்லை
என் முத்தம் தின்று போ என்கிறாய் .!!!
==========================

இதழ் கொண்டு
மை தீட்டும்
புது யுக்தி
எங்கறிந்தாயடா!!!
================

இதழ் பட்டுத் தெறித்ததும்
மழைத்துளி
தேன்துளியானடா.!!!
================

என்னை தொட்டு
சிதறும்
உன் முத்தத் துளிகள்
உனக்கான கவிதையாகிறது .!!!
==========================

நீ பொழியும்
முத்த மழையில்
நான் பூக்களாய்
நனைகிறேன் !!!
=============

இதழ் மடிப்பில்
சேகரித்துக் கொள்ளடா
ஒவ்வொரு
முத்தத் துளிகளையும்

மொத்தமாய் கணக்கிட்டுகொள்வோம் .!!!


6 comments:

  1. ஹஹா அம்மா.... மொத்தமா கணக்கிடணும்னா ஒரு ஜென்மம் போதாதே

    ReplyDelete
    Replies
    1. ஹஹாஹ்ஹா.. காயு மா....

      Delete
  2. இதற்கெல்லாம் கணக்கு கிடையாது...!!!

    ReplyDelete
  3. எல்லாமே ரசிக்கும்படியான கவிதைகள்....

    ReplyDelete