Tuesday 17 June 2014

விடியல்களின் ஒரு வெளிச்சப் பயணம் தேடி !!!


விடியல்களின் வெளிச்சம் தேடி
விரைந்து செல்கிறோம்... ஒரு பயணம்!

நம்பிக்கையின் ஒளிபற்றி,
முன்னேறிக் கொண்டிருக்கிறோம்,
எம் வாழ்வின் விடியல் நோக்கி...

புத்தகம் சுமக்கும் கைகளில்
ஆயுதமேந்தி
புன்னகை சுமந்த எங்கள் முகமோ
புரட்சியின் ஆயுள் ரேகை சுமந்து...

மனிதர்களை வதைத்த மனங்களில்
மனிதம் விதைக்க விரைகிறோம்...

இனி வரும் எம் மக்கள்
முகங்களில் புன்னகை மலரவேண்டும்...

கண்ணிவெடிகளின் சப்தம் கேட்ட எம் மக்கள்,
இனி வான வேடிக்கை காணவேண்டும்...

அகதிகளாய் அந்நிய தேசம் செல்லாமல்,
எம் மண்ணின் மூச்சு காற்றை சுவாசிப்போம்...

கைகோர்ப்போம் விடியல்களின்
ஒரு வெளிச்சப் பயணம் தேடி !!!


 


6 comments:

  1. இந்த வெளிச்சப் பயணத்திற்கு ஒரு முழுமையான , தலைமையும் வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. இளைய தலைமுறையினர் இணைந்தால் நிலையானதொரு தலைமை கிடைக்கும் எழில் மேடம் .

      Delete
  2. நல்லதொரு பயணம் நடத்திட கனிவான வாழ்த்துக்கள் !! இணைக்றேன் உன்னுடன் என்றுமெ உன் பயணச்சுவட்டில் விடியலை நோக்கி !!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும் அன்பு நன்றியும் அப்பா...

      Delete
  3. ஒற்றுமையுடன் பயணம் தொடரட்டும்...

    ReplyDelete